» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தமிழக முதல்வருடன் பவானி தேவி சந்திப்பு: வாளை பரிசாக வழங்கினார்!

வியாழன் 5, ஆகஸ்ட் 2021 12:20:21 PM (IST)டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வாள் வீச்சு வீராங்கனை பவானி தேவி முதல்வர் மு.க. ஸ்டாலினை தலைமை செயலகத்தில்  சந்தித்து வாழ்த்து பெற்றார்.

டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டியில் தமிழ்நாடு சார்பில் வாள்வீச்சு போட்டியில் பங்கேற்ற தமிழக வீராங்கனை பவானி தேவி சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது பேசிய அவர் "ஒலிம்பிக்கில் என்னுடைய போட்டி முடிந்தது. நாடு திரும்பியிருக்கிறேன். முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றேன்.

இந்தியாவிலேயே முதல் முறையாக வாள்வீச்சுப் போட்டியில் நான் கலந்து கொண்டேன். தமிழ்நாட்டிற்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்க்கக்கூடியதாக அது அமைந்துள்ளது. இதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. என் குடும்பத்தினர் மிகவும் உறுதுணையாக இருந்தனர். குறிப்பாக என் அம்மா மிகவும் கஷ்டப்பட்டுள்ளார்.  முதலமைச்சர் என்னுடைய வாள் சண்டையை பார்த்ததாக குறிப்பிட்டு பாராட்டினார். என்னை ஊக்குவித்து என் தாயாரையும் முதலமைச்சர் பாராட்டியது மகிழ்ச்சியளித்தது.

முதலமைச்சருக்கு என்னுடைய வாளை பரிசாக வழங்கினேன். அடுத்த முறை ஒலிம்பிக்கில் விளையாடுவதற்கு இது உறுதுணையாக இருக்கும் என முதலமைச்சர் மீண்டும் வாளை எனக்கே வழங்கினார். என்ன உதவியானாலும் செய்யத் தயார், அடுத்த ஒலிம்பிக்கில் நன்றாக விளையாட வேண்டும். தமிழக அரசின் உறுதுணை நிச்சயம் இருக்கும் என்ற நம்பிக்கையையும் அளித்தார். வருங்காலத்தில் உதவிகரமாக இருப்பதாக நம்பிக்கை அளித்தார். தமிழ்நாடு அரசு மின்துறையில் நான் வேலை செய்வதால் அது குறித்தும் முதலமைச்சர் கேட்டிருந்தார்.என்று பவானி தேவி தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory