» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தென்பழனி கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் 16-ஆம் ஆண்டு வருசாபிஷேகம் கோலாகலம்
ஞாயிறு 5, ஜூலை 2026 10:48:23 AM (IST)

கழுகுமலை கழுகாசலமூர்த்தி குடைவரை கோவிலில் வருசாபிஷேக விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தமிழகத்தின் தென்பழனி என்று அழைக்கப்படும் தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை கழுகாசலமூர்த்தி குடைவரை கோவிலில் நேற்று 16-ஆம் ஆண்டு வருசாபிஷேக விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இத்திருவிழாவில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வருசாபிஷேக விழாவையொட்டி நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 6 மணிக்கு திருவனந்தல் பூஜை, விளா பூஜை மற்றும் காலசந்தி பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து காலை 7 மணியளவில் முருகப்பெருமானுக்குச் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் செய்யப்பட்டன. காலை 8.30 மணிக்கு மேல் கும்ப பூஜை, ஹோமம் மற்றும் சுவாமி, அம்மனுக்கு விசேஷ அபிஷேகங்களும் பூஜைகளும் நடந்தன.
இதனைத் தொடர்ந்து பகல் 11 மணியளவில் மூலவர், பரிவார மூர்த்திகள் மற்றும் கோவில் விமான கோபுரங்களில், கூடிருந்த பக்தர்களின் 'அரோகரா' கோஷங்கள் விண்ணதிர முழங்கப் புனித நீர் ஊற்றப்பட்டுச் சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடத்தப்பட்டன. பின்னர், கழுகாசலமூர்த்தி, வள்ளி, தெய்வானை மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மாப்பொடி, மஞ்சள் பொடி, பால், இளநீர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் மகா அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்கார தீபாராதனைகள் விமரிசையாக நடைபெற்றன.
இவ்விழாவில் கோவில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன், பவுர்ணமி கிரிவல குழு தலைவர் மாரியப்பன், பிரதோஷ குழு தலைவர் முருகன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதற்கான முழுமையான ஏற்பாடுகளைக் கோவில் நிர்வாக அதிகாரி, தலைமை எழுத்தர் மற்றும் கோவில் பணியாளர்கள் ஒருங்கிணைந்து செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர் : 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்!
ஞாயிறு 5, ஜூலை 2026 11:35:30 AM (IST)

தூத்துக்குடி மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் அதிரடி மாற்றம்: நெல்லை சரக டிஐஜி உத்தரவு!
சனி 4, ஜூலை 2026 9:05:42 PM (IST)

எம்.எல்.ஏ.க்கள் பேரம், உளவுத்துறை அச்சுறுத்தல் : ஆளுநரைச் சந்தித்து திமுக பிரதிநிதிகள் புகார்!
சனி 4, ஜூலை 2026 8:57:44 PM (IST)

த.வெ.க. ஆட்சியை கவிழ்க்க ₹180 கோடியில் சதித்திட்டம்: செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ்!
சனி 4, ஜூலை 2026 5:41:06 PM (IST)

மக்கள் வரிப்பணம் ரூ.1.53 கோடி வீணடிப்பு? பாரதியார் நினைவு இல்லச் சீரமைப்பில் முறைகேடு புகார்!!
சனி 4, ஜூலை 2026 4:45:48 PM (IST)

குற்றாலம் அருவிகளில் சீசன் களைகட்டியது: சுற்றுலாப் பயணிகள் உற்சாக குளியல்
சனி 4, ஜூலை 2026 12:28:42 PM (IST)


