» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குற்றாலம் அருவிகளில் சீசன் களைகட்டியது: சுற்றுலாப் பயணிகள் உற்சாக குளியல்

சனி 4, ஜூலை 2026 12:28:42 PM (IST)

FivefallskUtral.jpg

தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் சாரல் மழையின் காரணமாகக் குற்றால அருவிகளுக்குத் தண்ணீர் வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. வார இறுதி விடுமுறை நாளான இன்று சுற்றுலா பயணிகளின் வருகை பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகிறது.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நேற்று காலை முதல் மாலை வரை தொடர்ந்து சாரல் மழை பெய்துள்ளது. இதன் காரணமாகக் குற்றாலம் ஐந்தருவியின் ஐந்து கிளைகளிலும், மெயின் அருவியின் அனைத்துப் பகுதிகளிலும் பரவலாகத் தண்ணீர் கொட்டுகிறது. இதேபோல் புலியருவியின் மூன்று கிளைகளிலும், பழைய குற்றால அருவி மற்றும் சிற்றருவியிலும் தண்ணீர் வரத்து கணிசமாக உயர்ந்துள்ளது. இன்று காலையிலும் குற்றாலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விட்டு விட்டுச் சாரல் மழை பெய்து வருகிறது.

நேற்று மாலை முதலே சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், இன்று சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் கூட்டம் மேலும் அலைமோதியது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் கார்கள், வேன்கள், பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வந்தவண்ணம் உள்ளனர்.

ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்து நின்று குளித்து மகிழ்கின்றனர். பொதுமக்களின் நடமாட்டம் மற்றும் வாகனப் போக்குவரத்து அதிகரித்துள்ளதால், அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு அனைத்து அருவிப் பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory