» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சுயநலத்திற்காக ராஜினாமா செய்யும் எம்எல்ஏக்களை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: தமிழிசை பேட்டி!
சனி 4, ஜூலை 2026 10:59:34 AM (IST)
சுயநலத்திற்காகத் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை அவசர அவசரமாக ராஜினாமா செய்யும் நபர்களை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
திருவொற்றியூரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தமிழிசை சௌந்தரராஜன் கூறியிருப்பதாவது: "தவெகவினர் தங்களை ஒரு தூய சக்தி என்று கூறிக்கொள்கிறார்கள், அதனை அவர்கள் எப்போதும் காத்துக்கொள்ள வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு மாதம் கூட இன்னும் நிறைவடையவில்லை. அதற்குள் மக்கள் பிரதிநிதிகள் ராஜினாமா செய்வதால் எவ்வளவு பொதுமக்களின் வரிப்பணம் வீணாகிறது என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.சுமார் 80,000 வாக்குகள் வித்தியாசத்தில் பெருவாரியான வெற்றி பெற்ற விஜயபாஸ்கர் போன்றவர்கள் எல்லாம், தங்களுக்கு வாக்களித்த மக்களின் எண்ணங்களைச் சிறிதும் மதிக்காமல் தங்களது சுயநலத்திற்காகப் பதவிகளை ராஜினாமா செய்கிறார்கள். இவ்வாறு சுயநலத்திற்காக ராஜினாமா செய்யும் எம்எல்ஏக்களை ஜனநாயகத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.
பணத்தைக் கொடுத்து வேறொரு ஆட்சியைக் கவிழ்க்க வேண்டிய அவசியம் பாஜகவிற்கு எப்போதுமே இல்லை. தவெக ஆட்சியைக் கவிழ்ப்பதற்காகப் பணம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் பாஜகவிற்கு எந்தவிதமான பங்கும் இல்லை" என்று தமிழிசை சௌந்தரராஜன் தனது பேட்டியில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எம்.எல்.ஏ.க்கள் பேரம், உளவுத்துறை அச்சுறுத்தல் : ஆளுநரைச் சந்தித்து திமுக பிரதிநிதிகள் புகார்!
சனி 4, ஜூலை 2026 8:57:44 PM (IST)

த.வெ.க. ஆட்சியை கவிழ்க்க ₹180 கோடியில் சதித்திட்டம்: செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ்!
சனி 4, ஜூலை 2026 5:41:06 PM (IST)

மக்கள் வரிப்பணம் ரூ.1.53 கோடி வீணடிப்பு? பாரதியார் நினைவு இல்லச் சீரமைப்பில் முறைகேடு புகார்!!
சனி 4, ஜூலை 2026 4:45:48 PM (IST)

குற்றாலம் அருவிகளில் சீசன் களைகட்டியது: சுற்றுலாப் பயணிகள் உற்சாக குளியல்
சனி 4, ஜூலை 2026 12:28:42 PM (IST)

ஜூலை 10-ல் கட்டாயம் ஆஜர்: நிதி அமைச்சர் மரிய வில்சனுக்கு நீதிமன்றம் இறுதி உத்தரவு!
சனி 4, ஜூலை 2026 12:20:54 PM (IST)

மு.க.ஸ்டாலின் குடும்பத்துடன் லண்டன் பயணம்: விமான நிலையத்தில் கட்சியினர் உற்சாக வரவேற்பு!
சனி 4, ஜூலை 2026 12:02:25 PM (IST)


