» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வகுப்பறையில் மாணவிக்குப் பாலியல் தொல்லை: ஆசிரியருக்குச் சாகும்வரை சிறை தண்டனை விதிப்பு!
செவ்வாய் 30, ஜூன் 2026 8:17:38 AM (IST)
வகுப்பறையில் மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த அரசுப் பள்ளி ஆசிரியருக்குச் சாகும்வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து திருநெல்வேலி மாவட்ட சிறப்பு போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சிதம்பரம் என்ற நடேசன் (63). இவர் அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் கைத்தறி மற்றும் நெசவுப் பிரிவு ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். கடந்த 2022 ஆம் ஆண்டு, ஒன்பது வயது மாணவி ஒருவருக்கு இவர் வகுப்பறையில் வைத்துப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அம்மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். பெற்றோர் அளித்த புகாரின் பேரில், சேரன்மாதேவி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிதம்பரத்தைக் கைது செய்தனர்.இந்த வழக்கின் விசாரணை நெல்லை மாவட்ட சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் இறுதி விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று நீதிபதி சுரேஷ்குமார் தீர்ப்பளித்தார். குற்றம் சாட்டப்பட்ட சிதம்பரம் என்ற நடேசனுக்குச் சாகும்வரை சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும், அவருக்கு 20,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் 5 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் எனவும் நீதிபதி சுரேஷ்குமார் தனது தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எம்.எல்.ஏ.க்கள் பேரம், உளவுத்துறை அச்சுறுத்தல் : ஆளுநரைச் சந்தித்து திமுக பிரதிநிதிகள் புகார்!
சனி 4, ஜூலை 2026 8:57:44 PM (IST)

த.வெ.க. ஆட்சியை கவிழ்க்க ₹180 கோடியில் சதித்திட்டம்: செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ்!
சனி 4, ஜூலை 2026 5:41:06 PM (IST)

மக்கள் வரிப்பணம் ரூ.1.53 கோடி வீணடிப்பு? பாரதியார் நினைவு இல்லச் சீரமைப்பில் முறைகேடு புகார்!!
சனி 4, ஜூலை 2026 4:45:48 PM (IST)

குற்றாலம் அருவிகளில் சீசன் களைகட்டியது: சுற்றுலாப் பயணிகள் உற்சாக குளியல்
சனி 4, ஜூலை 2026 12:28:42 PM (IST)

ஜூலை 10-ல் கட்டாயம் ஆஜர்: நிதி அமைச்சர் மரிய வில்சனுக்கு நீதிமன்றம் இறுதி உத்தரவு!
சனி 4, ஜூலை 2026 12:20:54 PM (IST)

மு.க.ஸ்டாலின் குடும்பத்துடன் லண்டன் பயணம்: விமான நிலையத்தில் கட்சியினர் உற்சாக வரவேற்பு!
சனி 4, ஜூலை 2026 12:02:25 PM (IST)


