» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மாணவி கொலை வழக்கு: குற்றவாளி மேல்முறையீடு செய்ய மேலும் ஒரு வாரம் அவகாசம்!
செவ்வாய் 30, ஜூன் 2026 7:40:53 AM (IST)
விளாத்திகுளம் பிளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்துகொலை செய்யப்பட்ட வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி மேல்முறையீடு செய்வதற்கான கால அவகாசத்தை மேலும் ஒரு வாரம் நீட்டித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நேற்று திங்கள்கிழமை உத்தரவிட்டது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பிளஸ் 2 மாணவி ஒருவர் காட்டுப் பகுதியில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். போலீசார் நடத்திய விசாரணையில், அம்மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதியானது. இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்பவரைப் போலீசார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையில், குற்றஞ்சாட்டப்பட்ட தர்ம முனீஸ்வரனுக்கு கடந்த மாதம் 25 ஆம் தேதி மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது.இந்த மரண தண்டனையை உறுதி செய்யக் கோரி காவல் துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கு நேற்று நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, ஆர்.பூர்ணிமா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தர்ம முனீஸ்வரன் தரப்பு வழக்கறிஞர், மரண தண்டனையை எதிர்த்து மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யக் கூடுதலாக நான்கு வாரங்கள் அவகாசம் கோரினார். இதற்கு மாணவியின் பெற்றோர் தரப்பு வழக்கறிஞர்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தண்டனை பெற்ற தர்ம முனீஸ்வரன் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய மேலும் ஒரு வாரம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர். அத்துடன் இந்த வழக்கு விசாரணை வரும் ஜூலை 6 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
naan thaanJun 30, 2026 - 02:04:59 PM | Posted IP 172.7*****
தர்ம முனீஸ்வரன் தரப்பு வழக்கறிஞர்... chi.... koochame illa
மேலும் தொடரும் செய்திகள்

எம்.எல்.ஏ.க்கள் பேரம், உளவுத்துறை அச்சுறுத்தல் : ஆளுநரைச் சந்தித்து திமுக பிரதிநிதிகள் புகார்!
சனி 4, ஜூலை 2026 8:57:44 PM (IST)

த.வெ.க. ஆட்சியை கவிழ்க்க ₹180 கோடியில் சதித்திட்டம்: செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ்!
சனி 4, ஜூலை 2026 5:41:06 PM (IST)

மக்கள் வரிப்பணம் ரூ.1.53 கோடி வீணடிப்பு? பாரதியார் நினைவு இல்லச் சீரமைப்பில் முறைகேடு புகார்!!
சனி 4, ஜூலை 2026 4:45:48 PM (IST)

குற்றாலம் அருவிகளில் சீசன் களைகட்டியது: சுற்றுலாப் பயணிகள் உற்சாக குளியல்
சனி 4, ஜூலை 2026 12:28:42 PM (IST)

ஜூலை 10-ல் கட்டாயம் ஆஜர்: நிதி அமைச்சர் மரிய வில்சனுக்கு நீதிமன்றம் இறுதி உத்தரவு!
சனி 4, ஜூலை 2026 12:20:54 PM (IST)

மு.க.ஸ்டாலின் குடும்பத்துடன் லண்டன் பயணம்: விமான நிலையத்தில் கட்சியினர் உற்சாக வரவேற்பு!
சனி 4, ஜூலை 2026 12:02:25 PM (IST)



ஏமாந்தவன்Jul 2, 2026 - 11:56:32 AM | Posted IP 104.2*****