» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கழிவுமீன் நிறுவனங்களை மூடக்கோரி 668-வது நாளாக பொட்டலூரணி மக்கள் போராட்டம்!
வெள்ளி 13, மார்ச் 2026 10:28:37 AM (IST)

தூத்துக்குடி அருகேயுள்ள பொட்டலூரணி பகுதியில் கழிவுமீன் நிறுவனங்களை மூடக்கோரி 668-வது நாளாக போராட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி அருகேயுள்ள பொட்டலூரணி பகுதியில் உள்ள கழிவுமீன் நிறுவனங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைச் சுட்டிக்காட்டி, அவற்றை மூட வலியுறுத்தி கடந்த ஐந்து ஆண்டுகளாக மக்கள் போராட்டங்களை நடத்தி வந்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தப் போராட்டம் அறவழியில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
'நாள்கூடிக்' குழுமிப் போராடுதல், 'மாதக் கூடல்' ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் எனப் பல்வேறு வடிவங்களில் மக்கள் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர். இந்த மாதத்திற்கான 'மாதக் கூடல்' போராட்டம், போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சங்கரநாராயணன் தலைமையில் நடைபெற்றது. போராட்டக் குழுவின் பொறுப்பாளர்கள் இராதாகிருஷ்ணன், ஈஸ்டர் அந்தோணிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தலைமைப் பொறுப்பாளர் சண்முகம் வரவேற்புரையாற்றினார். வீரத்தமிழர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வைகுண்டமாரி, தமிழ்த் தேசியப் பேரவையின் பொறுப்பாளர் மணிமாறன், சமூக ஆர்வலர் பிரபா ஆகியோர் ஆகியோர் கண்டன உரையாற்றினர். நிகழ்வின் இறுதியில் பாலமுருகன் நன்றியுரை வழங்கினார். இதில் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குரூப் 2 முதன்மை தேர்வுக்கு 9 மணிக்கு மேல் வந்தால் அனுமதி கிடையாது: ஆட்சியர் அறிவிப்பு
வெள்ளி 13, மார்ச் 2026 12:53:27 PM (IST)

சிறுமி படுகொலை: குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவர் - கனிமொழி எம்.பி. உறுதி!
வெள்ளி 13, மார்ச் 2026 12:40:01 PM (IST)

எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்!
வெள்ளி 13, மார்ச் 2026 12:13:57 PM (IST)

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை: வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை!
வெள்ளி 13, மார்ச் 2026 12:10:01 PM (IST)

வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகை கொள்ளை: மர்ம நபர்கள் கைவரிசை!
வெள்ளி 13, மார்ச் 2026 8:40:03 AM (IST)

இளம்பெண் தலை துண்டித்து கொடூர கொலை: நடத்தை சந்தேகத்தால் கணவர் வெறிச்செயல்!
வெள்ளி 13, மார்ச் 2026 8:32:53 AM (IST)

