» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் பிளாஸ்டிக் ஒழிப்பிற்கு புதிய திட்டம்: மேயர் ஜெகன் பெரியசாமி அறிவிப்பு!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 4:53:16 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சியைப் பிளாஸ்டிக் இல்லா நகரமாக மாற்ற மேயர் ஜெகன் பெரியசாமி "நான் முத்து பேசுகிறேன்" எனும் புதிய விழிப்புணர்வு திட்டத்தை அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் பொதுமக்களிடம் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு, தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கான ஆணைகளை 16 பயனாளிகளுக்கு மாநகராட்சி அலுவலகத்தில் வைத்து மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்.
அப்போது பேசிய அவர், "மக்களுக்குத் தேவையான சாலை வசதிகள், புதிய குடிநீர் இணைப்புகள் மற்றும் சொத்து வரி தொடர்பான சேவைகள் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகின்றன. மாநகராட்சியின் வளர்ச்சிப் பணிகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்," என கேட்டுக்கொண்டார்.
மாநகரத்தின் பிரதான வடிகாலான 7 கிலோ மீட்டர் நீளம் கொண்ட பக்கிள் ஓடையில் பொதுமக்கள் கேரி பேக் (Carry bag) மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை வீசுவதால் ஓடை அசுத்தமடைவதோடு, நீர் ஓட்டமும் தடைபடுகிறது. இதைத் தடுக்க புதிய விழிப்புணர்வு போர்டுகள் வைக்கப்பட உள்ளன.
"நான் முத்து பேசுகிறேன்", "நான் முத்து மாநகரம் பேசுகிறேன்", "என்னை அசுத்தம் செய்ய வேண்டாம்" போன்ற வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பலகைகள் பக்கிள் ஓடை மற்றும் முக்கிய சந்திப்புகளில் வைக்கப்படும்.
மாநகரத்தின் மீது மக்களுக்கு ஒரு உணர்வுப்பூர்வமான பிணைப்பை ஏற்படுத்தி, பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்கச் செய்வது. மாநகராட்சி பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதை மக்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
மாநகராட்சியைத் தூய்மையாகப் பராமரிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை. பிளாஸ்டிக் பைகளை ஓடைகளில் வீசுவதை நிறுத்தி, மாநகராட்சி மேற்கொள்ளும் தூய்மைப் பணிகளுக்குப் பொதுமக்கள் துணை நிற்க வேண்டும் என்று மேயர் தனது உரையில் வலியுறுத்தினார். நிகழ்ச்சியில் ஆணையர் ப்ரியங்கா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு நிதி: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
ஞாயிறு 8, பிப்ரவரி 2026 10:43:51 AM (IST)

தூத்துக்குடி மழை பாதிப்பில்லா மாநகராக மாற்றம்: மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!
ஞாயிறு 8, பிப்ரவரி 2026 9:12:34 AM (IST)

தேசிய கல்விக் கொள்கையை அரசியல் செய்யும் திமுக : பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கதன் கண்டனம்!
சனி 7, பிப்ரவரி 2026 9:39:23 PM (IST)

வீட்டில் வைத்து மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர் கைது : நெல்லையில் பரபரப்பு
சனி 7, பிப்ரவரி 2026 5:40:09 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 23 பணியிடங்கள் : பிப்.16க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு
சனி 7, பிப்ரவரி 2026 5:29:54 PM (IST)

போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகை அஞ்சு கிருஷ்ணா உள்ளிட்ட 9 பேர் கைது..!
சனி 7, பிப்ரவரி 2026 5:23:14 PM (IST)


jokerFeb 6, 2026 - 05:09:55 PM | Posted IP 104.2*****