» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகை அஞ்சு கிருஷ்ணா உள்ளிட்ட 9 பேர் கைது..!
சனி 7, பிப்ரவரி 2026 5:23:14 PM (IST)
போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகை அஞ்சு கிருஷ்ணா மற்றும் துணை நடிகை நிவேதா உள்பட 9பேர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டனர். இது தமிழ் திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இந்த விவகாரத்தில் சினிமா துறையினருக்கு போதைப்பொருள் சப்ளை செய்த கும்பலைச் சேர்ந்தவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், 'வெள்ளிமலை' உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகை அஞ்சு கிருஷ்ணாவும், போதைப்பொருள் பயன்படுத்தியதாக சென்னை வளசரவாக்கத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் துணை நடிகை நிவேதா உள்ளிட்ட 9 பேர் கைதாகியுள்ளனர். அவர்களிடம் இருந்து மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கைதானவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போதைப்பொருள் பயன்படுத்தியதாக சினிமா நடிகை கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு நிதி: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
ஞாயிறு 8, பிப்ரவரி 2026 10:43:51 AM (IST)

தூத்துக்குடி மழை பாதிப்பில்லா மாநகராக மாற்றம்: மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!
ஞாயிறு 8, பிப்ரவரி 2026 9:12:34 AM (IST)

தேசிய கல்விக் கொள்கையை அரசியல் செய்யும் திமுக : பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கதன் கண்டனம்!
சனி 7, பிப்ரவரி 2026 9:39:23 PM (IST)

வீட்டில் வைத்து மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர் கைது : நெல்லையில் பரபரப்பு
சனி 7, பிப்ரவரி 2026 5:40:09 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 23 பணியிடங்கள் : பிப்.16க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு
சனி 7, பிப்ரவரி 2026 5:29:54 PM (IST)

பதிவாளர் அலுவலகங்கள் ஊழலின் உறைவிடமாகத் திகழ்கின்றன: அன்புமணி குற்றச்சாட்டு
சனி 7, பிப்ரவரி 2026 5:13:47 PM (IST)

