» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடி மாவட்டத்தில் 23 பணியிடங்கள் : பிப்.16க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு
சனி 7, பிப்ரவரி 2026 5:29:54 PM (IST)
தூத்துக்குடி மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, வட்டார இயக்க மேலாண்மை அலகில் காலியாக உள்ள 23 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களை ஒப்பந்த முறையில் நிரப்பிட விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தூத்துக்குடி மாவட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற்கான தகுதி மற்றும் விண்ணப்ப படிவம் thoothukudi.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றுகளின் நகல்களுடன் தூத்துக்குடி மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் அலுவலகத்தில் அனைத்து வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் 5.45 வரை நேரிலோ அல்லது இணை இயக்குநர் / திட்ட இயக்குநர், தமிழ்நாடு ஊரக வாழ்வாதர இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், இரண்டாவது தளம், கோரம்பள்ளம் - 628101, தூத்துக்குடி மாவட்டம் என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாகவோ 16.02.2026 (திங்கட்கிழமை) மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு நிதி: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
ஞாயிறு 8, பிப்ரவரி 2026 10:43:51 AM (IST)

தூத்துக்குடி மழை பாதிப்பில்லா மாநகராக மாற்றம்: மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!
ஞாயிறு 8, பிப்ரவரி 2026 9:12:34 AM (IST)

தேசிய கல்விக் கொள்கையை அரசியல் செய்யும் திமுக : பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கதன் கண்டனம்!
சனி 7, பிப்ரவரி 2026 9:39:23 PM (IST)

வீட்டில் வைத்து மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர் கைது : நெல்லையில் பரபரப்பு
சனி 7, பிப்ரவரி 2026 5:40:09 PM (IST)

போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகை அஞ்சு கிருஷ்ணா உள்ளிட்ட 9 பேர் கைது..!
சனி 7, பிப்ரவரி 2026 5:23:14 PM (IST)

பதிவாளர் அலுவலகங்கள் ஊழலின் உறைவிடமாகத் திகழ்கின்றன: அன்புமணி குற்றச்சாட்டு
சனி 7, பிப்ரவரி 2026 5:13:47 PM (IST)


தனுஷாFeb 8, 2026 - 08:30:45 AM | Posted IP 172.7*****