» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஆபாச வீடியோ அனுப்பி போலீஸ்காரர் பாலியல் தொல்லை: ஆட்சியரிடம் இளம்பெண் பரபரப்பு புகார்
செவ்வாய் 13, ஜனவரி 2026 8:24:06 AM (IST)
செல்போனில் ஆபாச வீடியோ அனுப்பி தொல்லை கொடுப்பதாக போலீஸ்காரர் மீது இளம்பெண் ஆட்சியரிடம் புகார் அளித்தார்.
தென்காசி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. ஆட்சியர் கமல் கிஷோர் தலைமை தாங்கினார். இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கை சம்பந்தமான மனுக்களை வழங்கினர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த 33 வயது இளம்பெண் ஒருவர் தனது கணவருடன் வந்து ஆட்சியரிடம் மனு அளித்தார். அந்த மனு குறித்து அவர் கூறியதாவது: கடந்த 2023-ம் ஆண்டு எனது கணவர் ஒரு புகார் அளிப்பதற்காக புளியங்குடி காவல் நிலையத்துக்கு சென்றார். அப்போது அங்கு பணியில் இருந்த போலீஸ்காரர் ஒருவர் எனது கணவரின் செல்போனை பறித்து வைத்துக்கொண்டு அனுப்பிவிட்டார்.
அதில் இருந்து எனது செல்போன் எண்ணை எடுத்துக்கொண்டு, எனக்கு திடீரென 29 ஆபாச வீடியோக்கள் அனுப்பினார். 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை ஆபாச குறுஞ்செய்திகளையும் அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்தார். இதுகுறித்து எனது கணவரிடம் கூறினேன். அவர் 2024-ம் ஆண்டில் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு நேரில் சென்று புகார் அளித்தார். ஆனால் போலீசார் புகார் வாங்க மறுத்ததோடு எனது கணவரை மிரட்டினர்.
கடந்த 11.12.2025 அன்றும் எனது செல்போன் எண்ணிற்கு மீண்டும் போலீஸ்காரர் ஆபாச வீடியோ அனுப்பினார். அவை அனைத்தையும் தற்போது நான் ‘ஸ்கிரீன் ஷாட்’ ஆதாரமாக எடுத்து வைத்துள்ளேன். அவை அனைத்தையும் பதிவு செய்து மேலதிகாரிகளுக்கு பதிவு தபால் மூலம் அனுப்பினேன். ஆனாலும் புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த புகார் மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் கமல்கிஷோர், இதுகுறித்து உரிய விசாரணை நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். போலீஸ்காரர் மீது இளம்பெண் ஆட்சியரிடம் பாலியல் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை: கல்வித்துறை அறிவிப்பு
செவ்வாய் 13, ஜனவரி 2026 8:21:15 AM (IST)

அரசு மருத்துவமனையில் ரவுடி வெட்டிக்கொலை: சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!
திங்கள் 12, ஜனவரி 2026 8:37:25 PM (IST)

தமிழகத்தில் ஜன.15 முதல் வறண்ட வானிலை: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
திங்கள் 12, ஜனவரி 2026 5:49:48 PM (IST)

திருநெல்வேலி நலவாழ்வுச் சங்கத்தில் பணியிடங்கள் : ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்!
திங்கள் 12, ஜனவரி 2026 5:42:05 PM (IST)

அதிமுக கூட்டணியில் ஓரிரு நாள்களில் புதிதாக ஒரு கட்சி இணைகிறது : இபிஎஸ் தகவல்
திங்கள் 12, ஜனவரி 2026 4:11:54 PM (IST)

கல்வி வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 5% இடஒதுக்கீடு : சமய நல்லிணக்க மாநாட்டில் வலியுறுத்தல்!
திங்கள் 12, ஜனவரி 2026 3:23:30 PM (IST)

