» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அதிமுக கூட்டணியில் ஓரிரு நாள்களில் புதிதாக ஒரு கட்சி இணைகிறது : இபிஎஸ் தகவல்
திங்கள் 12, ஜனவரி 2026 4:11:54 PM (IST)
ஓரிரு நாள்களில் அதிமுக கூட்டணியில் புதிய கட்சி ஒன்று இணையவுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக வேட்பாளர் நேர்காணல் நடைபெற்று வருகிறது. முன்னதாக அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட 2,000 -க்கும் அதிகமான விருப்ப மனுக்கள் அளிக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல் செய்து வருகிறார்.
அவ்வாறு இன்று நேர்காணலுக்கு வந்தவர்களிடம் இபிஎஸ் பேசுகையில், "அதிமுக கூட்டணியில் ஒரு சில நாள்களில் புதிய கட்சி இணையவுள்ளது. அதிமுக கூட்டணி வலிமையாக உள்ளது. மேலும் சில கட்சிகளுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். நம்பிக்கையுடன் இருங்கள். அதிமுக வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். தேர்தலில் வெற்றி பெற அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும்" என்று பேசியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக, பாஜக, பாமக(அன்புமணி) ஆகியோர் இணைந்துள்ள நிலையில் புதிதாக இணையவுள்ள கட்சி எது? என பரபரப்பு கிளம்பியுள்ளது. தேமுதிக, பாமக(ராமதாஸ் தரப்பு), ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோருடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக வேட்பாளர் நேர்காணல் நடைபெற்று வருகிறது. முன்னதாக அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட 2,000 -க்கும் அதிகமான விருப்ப மனுக்கள் அளிக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல் செய்து வருகிறார்.அவ்வாறு இன்று நேர்காணலுக்கு வந்தவர்களிடம் இபிஎஸ் பேசுகையில், "அதிமுக கூட்டணியில் ஒரு சில நாள்களில் புதிய கட்சி இணையவுள்ளது. அதிமுக கூட்டணி வலிமையாக உள்ளது. மேலும் சில கட்சிகளுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். நம்பிக்கையுடன் இருங்கள். அதிமுக வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். தேர்தலில் வெற்றி பெற அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும்" என்று பேசியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக, பாஜக, பாமக(அன்புமணி) ஆகியோர் இணைந்துள்ள நிலையில் புதிதாக இணையவுள்ள கட்சி எது? என பரபரப்பு கிளம்பியுள்ளது. தேமுதிக, பாமக(ராமதாஸ் தரப்பு), ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோருடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆபாச வீடியோ அனுப்பி போலீஸ்காரர் பாலியல் தொல்லை: ஆட்சியரிடம் இளம்பெண் பரபரப்பு புகார்
செவ்வாய் 13, ஜனவரி 2026 8:24:06 AM (IST)

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை: கல்வித்துறை அறிவிப்பு
செவ்வாய் 13, ஜனவரி 2026 8:21:15 AM (IST)

அரசு மருத்துவமனையில் ரவுடி வெட்டிக்கொலை: சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!
திங்கள் 12, ஜனவரி 2026 8:37:25 PM (IST)

தமிழகத்தில் ஜன.15 முதல் வறண்ட வானிலை: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
திங்கள் 12, ஜனவரி 2026 5:49:48 PM (IST)

திருநெல்வேலி நலவாழ்வுச் சங்கத்தில் பணியிடங்கள் : ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்!
திங்கள் 12, ஜனவரி 2026 5:42:05 PM (IST)

கல்வி வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 5% இடஒதுக்கீடு : சமய நல்லிணக்க மாநாட்டில் வலியுறுத்தல்!
திங்கள் 12, ஜனவரி 2026 3:23:30 PM (IST)

