» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை: கல்வித்துறை அறிவிப்பு

செவ்வாய் 13, ஜனவரி 2026 8:21:15 AM (IST)

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் (வியாழக்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையையொட்டி பெரும்பாலானோர் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாடுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். அதிலும் கிராமப்புறங்களில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் களைகட்டும்.

பொங்கல் பண்டிகையை தொடர்ந்து, திருவள்ளுவர் தினம், உழவர் தினம் என வரிசையாக அரசு பொது விடுமுறை வரும். அந்த வகையில் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடும் விதமாக தொடர் விடுமுறை அமையும்.

அதன்படி, நடப்பாண்டு பொங்கல் பண்டிகை வியாழக்கிழமையும், அதன் தொடர்ச்சியாக திருவள்ளுவர், உழவர் தினம் விடுமுறை வெள்ளிக்கிழமை, சனிக்கிழமையும் வருகிறது. அடுத்து ஞாயிற்றுக்கிழமையும் சேர்த்து மொத்தம் 4 நாட்கள் விடுமுறையாக இருந்தது. வழக்கமாக போகிப் பண்டிகைக்கு அரசு பொது விடுமுறை இருக்காது. அன்றைய தினம் பெரும்பாலான பள்ளிகள் செயல்படும்.

ஆனால் நடப்பாண்டில் போகிப் பண்டிகைக்கும் சேர்த்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை விடப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பை நேற்று வெளியிட்டு இருக்கிறது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘முதல்-அமைச்சரின் அறிவிப்பின்படி, அனைத்து வகை பள்ளிகளுக்கும் பொங்கல் பண்டிகையை கொண்டாட 14-ந் தேதி (அதாவது நாளை) முதல் 18-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது' என்று தெரிவித்துள்ளார். இதன்படி, பொங்கல் பண்டிகைக்கு நடப்பாண்டில் பள்ளிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை விடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory