» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கரூர் சம்பவம்: சிபிஐ அலுவலகத்தில் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆஜர்!

திங்கள் 29, டிசம்பர் 2025 11:06:53 AM (IST)



கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பான விசாரணைக்கு டெல்லி சிபிஐ அலுவலகத்தில் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆஜராகியுள்ளனர்.

கடந்த செப்டம்பர் 27, 2025 அன்று, கரூர் மாவட்டம் வேலுசாமபுரத்தில் நடிகர் விஜய் நடத்திய தமிழக வெற்றிக் கழகப் பரப்புரைக் கூட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர், சுமார் 100 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பான விசாரணைக்கு டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக மாநில நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆஜராகியுள்ளனர். மேலும், துணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல், கரூர் மாவட்ட செயலாளர் உள்ளிட்டோரும் விசாரணைக்கு நேரில் ஆஜராகியுள்ளனர். சிபிஐ சம்மன் அனுப்பி இருந்த நிலையில் டெல்லியில் விசாரணைக்காக ஆஜராகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory