» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் இருந்து 219 மாணவ-மாணவிகளை கீழடிக்கு அழைத்து சென்ற கனிமொழி எம்.பி.
ஞாயிறு 28, டிசம்பர் 2025 10:52:57 AM (IST)

தூத்துக்குடியில், அரசுப்பள்ளிகளில் படிக்கும் 219 மாணவ-மாணவிகளை கனிமொழி எம்.பி. கீழடிக்கு அழைத்து சென்று தொல்பொருள் அருங்காட்சியகத்தை பார்வையிட ஏற்பாடு செய்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் 219 பேரை சிவகங்கை மாவட்டம் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட கனிமொழி எம்.பி. அழைத்து வந்திருந்தார். அமைச்சர் தங்கம் தென்னரசுவும் வந்திருந்தார். கீழடி அகழாய்வு தள இயக்குனர் ரமேஷ், இணை இயக்குனர் அஜய் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். தொடர்ந்து கீழடி அகழாய்வு தளத்தில் உள்ள தொல்பொருட்களை மாணவ-மாணவிகளுடன் கனிமொழி எம்.பி.யும் பார்வையிட்டார்.
கீழடியில் நடைபெற்ற அகழாய்வுகளின்போது கண்டெடுக்கப்பட்ட பழங்கால பொருட்கள், தமிழர்களின் நாகரிகம், வாழ்வியல், எழுத்து மரபு, தொழில்நுட்ப முன்னேற்றம் குறித்து மாணவ-மாணவிகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தார். பின்னர் கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: தமிழர்களின் வரலாறு, நாகரிகம், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே எழுத்து வடிவம் கொண்ட தமிழ் மொழி ஆகியவற்றை மாணவ, மாணவிகள் அறிந்து கொள்ளும் வாய்ப்பை கீழடி அருங்காட்சியகம் மூலம் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்படுத்தி கொடுத்து உள்ளார்.
100 நாள் வேலைத்திட்டம் கிராமப்புற மக்களுக்காக கொண்டுவரப்பட்டது. மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததில் இருந்து இத்திட்டத்தில் 100 நாட்கள் வேலை கொடுத்தது இல்லை. அதிகபட்சமாக 40 நாட்கள்தான் கொடுக்கப்பட்டன. தற்போது இந்த திட்டத்தின் பெயரை மாற்றியது மட்டுமின்றி, வேலை கொடுக்கும் உரிமையையும் மாநில அரசிடம் இருந்து பறித்து உள்ளனர். இதன் மூலம் இந்த திட்டத்தையே மூடிவிட்டனர். இது கிராமப்புற மக்களின் பொருளாதாரத்தை பாதிக்கும்.
திட்டங்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டி பெருமைப்பட்டவர்தான் எடப்பாடி பழனிசாமி. முதல்-அமைச்சருக்கு இருக்கும் வேலைப்பளுவால் இதுகுறித்து எடப்பாடி பழனிசாமியுடன் விவாதிக்க நேரமில்லை. கட்சியில் உள்ள மற்ற தலைவர்கள் அவருடன் விவாதிக்க தயாராக உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பங்குச்சந்தை வர்த்தகத்தில் ரூ.15 லட்சம் இழந்ததால் டீக்கடைக்காரர் விஷம் குடித்து தற்கொலை!
ஞாயிறு 28, டிசம்பர் 2025 10:42:09 AM (IST)

வலுவான எதிரிகள் இருந்தால்தான் எதிர்க்க முடியும்: ஜனநாயகன் விழாவில் விஜய் பேச்சு
ஞாயிறு 28, டிசம்பர் 2025 9:03:11 AM (IST)

திருநெல்வேலியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்: ஆட்சியர் சுகுமார் ஆய்வு
சனி 27, டிசம்பர் 2025 5:23:34 PM (IST)

என்னோடு நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? முதல்வர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் சவால்
சனி 27, டிசம்பர் 2025 5:16:14 PM (IST)

தைப்பூச இருமுடி விழா: மேல்மருவத்தூரில் 29 எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்லும்!
சனி 27, டிசம்பர் 2025 5:00:20 PM (IST)

நாதக வெற்றிதான் தமிழகத்தின் பிரச்சினைகளுக்கு முடிவுரை எழுதும்: சீமான் பேச்சு
சனி 27, டிசம்பர் 2025 4:31:48 PM (IST)



.gif)