» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருநெல்வேலியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்: ஆட்சியர் சுகுமார் ஆய்வு

சனி 27, டிசம்பர் 2025 5:23:34 PM (IST)



திருநெல்வேலியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் மற்றும் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம்களை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படியும், சென்னை தலைமைத் தேர்தல் அலுவலர் மற்றும் அரசு செயலாளர் பொது (தேர்தல்) அவர்களின் அறிவுரையின்படியும், திருநெல்வேலி மாவட்டத்தில், 01.01.2026 - ஆம் தேதியினை தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணிகளை குறிப்பிட்ட கால அட்டவணைக்குள் முடிவுசெய்ய இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

வாக்காளர்கள் பட்டியலில் இதுவரை இடம்பெறாத இந்திய குடிமக்கள் மற்றும் 18 வயது நிரம்பிய இளம் வாக்காளர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட படிவம் 6-ல் பூர்த்தி செய்து உறுதிமொழி படிவத்துடன் கொடுத்து வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரினை சேர்த்திடவும் மற்றும் படிவம் 8 மூலம் திருத்தங்கள், முகவரி மாற்றங்கள் செய்து கொள்வதற்கு ஏதுவாக அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் 27.12.2025, 28.12.2025, 03.01.2026 மற்றும் 04.01.2026 சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன் அடிப்படையில் திருநெல்வேலி மாவட்டத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் காலை 9.00 மணிமுதல் மாலை 5.30 மணிவரை சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.

திருநெல்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருநெல்வேலி டவுண் பாரதியார் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி பாகம் எண் 317, 322 மற்றும் பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வண்ணார்பேட்டை, சாலை தெரு, மாநகராட்சி புதிய நடுநிலைப்பள்ளி பாகம் எண் 34 முதல் 41 வரை உள்ள வாக்குசாவடி மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் இன்று 27.12.2025 பார்வையிட்டு ஆய்வு செய்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory