» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மகளிர் அணி நிர்வாகியிடம் அத்துமீறல்: தவெக மாவட்ட செயலாளர் நீக்கம்!
சனி 20, டிசம்பர் 2025 9:04:34 PM (IST)
மகளிர் அணி நிர்வாகி வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததாக புகாரில் சிக்கிய தவெக நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் நீக்கப்பட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் வசிக்கும் ஜே.ஜே. செந்தில்நாதன் என்பவர் நீண்ட காலமாக விஜய் ரசிகர் மன்றத்திற்கு தலைவராக இருந்த நிலையில், விஜய் கடந்த ஆண்டு தொடங்கிய தமிழக வெற்றி கழகத்தின் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார். செந்தில்நாதன், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தவெக மகளிர் அணி நிர்வாகி ஒருவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததாக புகார் எழுந்தது.
கூட்டப்பள்ளி பகுதியில் உள்ள பெண் நிர்வாகி ஒருவரது வீட்டிக்குள் நள்ளிரவு நேரத்தில் சென்று கதவை பூட்டியதாகவும், இதுகுறித்து அறிந்த பெண்ணின் உறவினர்கள், கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றதாகவும் கூறப்படுகிறது. விசாரணையில், அந்தப் பெண்ணுடன் தவெக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், திருமணத்தை மீறிய உறவில் இருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து செந்தில் நாதனை தாக்கிய பெண்ணின் உறவினர்கள், அவரை அடுத்த நாள் காலையில் தான் விடுவித்துள்ளனர்.
இந்த விவகாரம் தவெக கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோக்களும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. இந்நிலையில், தவெக நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து அதிரடி நீக்கப்பட்டுள்ளார். மகளிர் அணி நிர்வாகி வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததாக புகார் எழுந்த நிலையில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நடவடிக்கை எடுத்துள்ளார்..
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி மேற்கு புறவழிச்சாலை பணிகளின் தரம் குறித்து அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு!!
சனி 20, டிசம்பர் 2025 9:20:36 PM (IST)

முதல் அமைச்சர் கனவை விஜய் தியாகம் செய்ய வேண்டும்: தமிழருவி மணியன்
சனி 20, டிசம்பர் 2025 8:57:07 PM (IST)

பணி நிரந்தரம் கோரி நர்சுகள் போராட்டம் : மண்டபத்தை பூட்டி வெளியேற்றியதால் பரபரப்பு!
சனி 20, டிசம்பர் 2025 5:32:16 PM (IST)

திருப்பரங்குன்றம் விவகாரம்: தீக்குளித்தவரின் குடும்பத்திற்கு தொழிலதிபர் ரூ.10 லட்சம் நிதியுதவி
சனி 20, டிசம்பர் 2025 11:19:51 AM (IST)

சென்னை பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் தீ விபத்து: இண்டர்நெட் சேவைகள் பாதிப்பு
சனி 20, டிசம்பர் 2025 11:12:46 AM (IST)

மீண்டும் ஒரு லட்சத்தை நோக்கி தங்கம் விலை: வெள்ளி விலையும் அதிகரிப்பு!
சனி 20, டிசம்பர் 2025 11:08:57 AM (IST)


.gif)