» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு

சனி 13, டிசம்பர் 2025 8:46:31 AM (IST)

அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை வரும் டிச.17ஆம் தேதிக்கு ஒத்திவைத்து தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.

மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மீது சொத்துக் குவிப்பு வழக்கு கடந்த 2006 இல் லஞ்ச ஒழிப்புத் துறையால் பதிவு செய்யப்பட்டு, வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு விசாரணை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நீதிமன்றத்தில் அமைச்சர் தரப்பு சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றபோது, அமைச்சரின் மனைவி, சகோதரர்கள் யாரும் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகவில்லை.

அமைச்சரின் மூன்று மகன்களில் ஒருவரான அனந்த மகேஸ்வரன் மட்டுமே ஆஜர் ஆனார். இதையடுத்து, வழக்கை விசாரிக்கும் மாவட்ட நீதிபதி வசந்தி, அடுத்தகட்ட விசாரணையை வருகிற டிச. 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory