» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பெண்குரலில் பேசி வாலிபரிடம் ரூ.17½ லட்சம் மோசடி செய்தவர் கைது!
வெள்ளி 12, டிசம்பர் 2025 3:28:52 PM (IST)
அரியலூர் அருகே திருமண ஆசை காட்டி, இளைஞரிடம் பெண் குரலில் பேசி 17 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் பகுதியை சேர்ந்த ஜெய்சங்கர் என்பவர் தனது மகன் பார்த்திபனுக்கு திருமணம் செய்து வைக்க தனியார் திருமண தகவல் நிலையத்தில் ஆன்லைனில் விவரங்களை பதிவு செய்திருந்தார். இந்த தகவல் அறிந்து whatsapp ஆப் மூலம் பெண் ஒருவர் தொடர்பு கொண்டு பார்த்திபனிடம் பேசியுள்ளார், சகஜமாக பேசி பழகி உள்ளனர்.மேலும் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டால் பணம் சம்பாதிக்கலாம் எனக் கூறி, பார்த்திபனிடமிருந்து ரூ.17.50 லட்சம் முதலீடு செய்ய வைத்து ஏமாற்றியுள்ளார், இது குறித்து காவல் நிலையத்தில் பார்த்திபன் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அது ஒரு ஆண் பெண் குரலில் பேசி ஏமாற்றியது தெரிய வந்தது, அதனை தொடர்ந்து நேற்று அரியலூர் போலீசார் பெண் குரலில் பேசி பார்த்திபனை ஏமாற்றிய கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் அசார் (36) என்பவரை கைது செய்து செல்போன், சிம் பறிமுதல் செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

புதிதாக 16,94,339 பேருக்கு மகளிர் உரிமைத் தொகை : முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
வெள்ளி 12, டிசம்பர் 2025 8:34:58 PM (IST)

திருப்பரங்குன்றத்தில் இருப்பது தீபத்தூண் அல்ல... சர்வே தூண் தான்! - தமிழக அரசு வாதம்!
வெள்ளி 12, டிசம்பர் 2025 5:26:29 PM (IST)

எஸ்ஐஆர் பணிகளுக்காக டிச.13, 14ல் சிறப்பு முகாம் : ஆட்சியர் இரா.சுகுமார் தகவல்
வெள்ளி 12, டிசம்பர் 2025 4:42:37 PM (IST)

தூத்துக்குடியில் ரயில் சேவையில் மாற்றம் : முத்துநகர் எக்ஸ்பிரஸ் மணியாச்சியில் இருந்து இயக்கம்!
வெள்ளி 12, டிசம்பர் 2025 12:25:21 PM (IST)

நடிகர் ரஜினிகாந்த் 75-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
வெள்ளி 12, டிசம்பர் 2025 11:44:35 AM (IST)

வீட்டில் கருக்கலைப்பு செய்ததால் கர்ப்பிணி உயிரிழப்பு: கணவர் உள்பட 3 பேர் கைது
வெள்ளி 12, டிசம்பர் 2025 11:32:06 AM (IST)


.gif)