» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

புதிதாக 16,94,339 பேருக்கு மகளிர் உரிமைத் தொகை : முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

வெள்ளி 12, டிசம்பர் 2025 8:34:58 PM (IST)

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2-ஆவது கட்ட விரிவாக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச. 12) சென்னையில் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை கடந்த 2023-ஆம் தேதி முதல்வர் அறிவித்தார். சுமாா் 1,13,75,492 பயனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்கத்தை, சென்னையில் நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்ற வெல்லும் தமிழ்ப் பெண்கள் நிகழ்வில் மகளிருக்கு உரிமைத் தொகையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

புதிதாக 16,94,339 பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை இன்று அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதனால் மகளிர் உரிமைத் தொகை பெறும் பெண்களின் எண்ணிக்கை 1.30 கோடியாக உயர்ந்துள்ளது. இந்நிகழ்ச்சியில் சமூக சேவகியும் பத்மபூஷண் விருது பெற்றவருமான கிருஷ்ணம்மாள் ஜெகன்நாதன் மற்றும் 2022-ஆம் ஆண்டு சீனாவின் காங்சோவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளார் ஆசிய விளையாட்டு பூப்பந்து போட்டியில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்திய துளசிமதி முருகேசன் உள்பட ஏராளமான பெண் சாதனையாளா்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory