» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடியில் ரயில் சேவையில் மாற்றம் : முத்துநகர் எக்ஸ்பிரஸ் மணியாச்சியில் இருந்து இயக்கம்!

வெள்ளி 12, டிசம்பர் 2025 12:25:21 PM (IST)



தூத்துக்குடி - மீளவிட்டான் தண்டவாளத்தில் இணைப்புப் பணி காரணமாக தூத்துக்குடியில் வருகிற 14ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி ரயில் நிலையத்திலிருந்து மீளவிட்டான் ரயில் நிலையம் வரை வருகிற 14ம் தேதி முதல் 23வரை தண்டவாளத்தில் இணைப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால் தூத்துக்குடி - திருநெல்வேலி ரயில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், பாலருவி எக்ஸ்பிரஸ் திருநெல்வேலி வரையிலும், முத்துநகர் எக்ஸ்பிரஸ் மணியாச்சி வரையிலும், மேட்டுப்பாளையம் எக்ஸ்பிரஸ் மணியாச்சி வரையிலும், ஓகா எக்ஸ்பிரஸ் ரயில் கோவில்பட்டி வரையிலும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory