» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கேரளாவில் ரயில் மோதி தமிழகத்தை சேர்ந்த 4 பேர் பலி: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!
ஞாயிறு 3, நவம்பர் 2024 8:58:41 PM (IST)
கேரளாவில் ரயில் மோதி தமிழகத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
முதல்-அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கேரளா மாநிலம், பாலக்காடு, ஷோரனூர், பாரதப்புழா பாலம் அருகில் நேற்று (02.11.2024) பிற்பகல் கேரளா எக்ஸ்பிரஸ் ரயில் எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் ரயில் பாதையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த சேலம் மாவட்டம் மற்றும் வட்டம், ஆச்சாங்குட்டப்பட்டி, அடிமலை புதூர் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் (வயது 55), அவரது மனைவி வள்ளி (வயது 45), காரைக்காடு, டி.பெருமாள் பாளையத்தைச் சேர்ந்த லட்சுமணன் (வயது 45) மற்றும் அல்லிக்குட்டையைச் சேர்ந்த ராஜம்மாள் (வயது 43) ஆகிய நால்வரும் உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அன்னை வேளாங்கண்ணி கெபி 44-வது ஆண்டு திருவிழா : தூத்துக்குடியில் கோலாகலத் தொடக்கம்!
சனி 29, ஆகஸ்ட் 2026 9:22:58 PM (IST)

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் : நலதிட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்!
சனி 29, ஆகஸ்ட் 2026 5:43:26 PM (IST)

மூதாட்டியைக் கட்டிப்போட்டு 44 கிராம் நகை பறிப்பு : பக்கத்து வீட்டுப் பெண் உட்பட 2 பேர் கைது!
சனி 29, ஆகஸ்ட் 2026 5:14:03 PM (IST)

பெண்ணைக் கொன்று வேக வைத்த கொடூர தம்பதி கைது: விசாரணையில் பகீர் தகவல்கள்!
சனி 29, ஆகஸ்ட் 2026 4:39:35 PM (IST)

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துக: தமிழக அரசுக்கு தேமுதிக வலியுறுத்தல்!
சனி 29, ஆகஸ்ட் 2026 10:50:02 AM (IST)

அஞ்சல்துறையில் 2,095 பணியிடங்கள்: பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
சனி 29, ஆகஸ்ட் 2026 10:34:39 AM (IST)


