» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கார் விபத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரிதாப சாவு; மேலும் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 23, ஜூன் 2024 8:58:56 AM (IST)
திருச்செந்தூர் அருகே கார் விபத்தில் தூத்துக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
மதுரை அம்மாபட்டியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (38). இவர் தூத்துக்குடி மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று மாலையில் தன்னுடன் பணியாற்றும் ஏட்டு நாகராஜன் (43), போலீஸ்காரர் லோகேஷ்வரன் (34) ஆகியோருடன் காரில் நெல்லையில் இருந்து திருச்செந்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் கிழக்கு தெருவை சேர்ந்தவர் கணேசன் மகன் ராஜசேகர் (38). இவர் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் தனது குடும்பத்தினர், உறவினர்களுடன் திருச்செந்தூருக்கு சென்று விட்டு, அங்கிருந்து வேனில் திரும்பி வந்து ெகாண்டிந்தனர். திருச்செந்தூர் அருேக நத்தக்குளம் வளைவு பகுதியில் சென்றபோது, போலீசார் வந்த காரும், பக்தர்கள் வந்த வேனும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது.
இதில் காரில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், ஏட்டு நாகராஜன், போலீஸ்காரர் லோகேஷ்வரன் மற்றும் வேனில் வந்த ராஜசேகர் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். உடனே அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், ஏட்டு நாகராஜன், போலீஸ்காரர் லோகேஸ்வரன் ஆகியோரை மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி கார்த்திகேயன் பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேருக்கும் தீவிர சிகிச்ைச அளிக்கப்படுகிறது. இதுகுறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஓபிஎஸ் உட்பட 3பேரை கூட்டணியில் கூட சேர்க்க முடியாது: அமித் ஷாவிடம் இபிஎஸ் திட்டவட்டம்
வியாழன் 18, செப்டம்பர் 2025 12:32:30 PM (IST)

வாலிபர் மீது கார் ஏற்றிய போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்!
வியாழன் 18, செப்டம்பர் 2025 11:39:54 AM (IST)

பிளாஸ்டிக் குடோன் தீவிபத்தில் 10 லட்சம் சேதம்: புகைமூட்டத்தால் பொதுமக்கள் கடும் அவதி!!
வியாழன் 18, செப்டம்பர் 2025 11:36:24 AM (IST)

பனை மரத்தை வெட்ட மாவட்ட ஆட்சியர் அனுமதி கட்டாயம் : அரசாணை வெளியீடு
வியாழன் 18, செப்டம்பர் 2025 11:16:50 AM (IST)

திமுக முப்பெரும் விழாவில் கனிமொழிக்கு பெரியார் விருது: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்!
வியாழன் 18, செப்டம்பர் 2025 10:27:27 AM (IST)

தாயை வெட்டிக்கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை: நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு
வியாழன் 18, செப்டம்பர் 2025 8:29:56 AM (IST)
