» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் பஸ்சில் திடீர் பயணம்: இலவச பயணம் குறித்து பெண்களிடம் உரையாடல்!

சனி 23, அக்டோபர் 2021 3:45:33 PM (IST)தடுப்பூசி முகாம்களை ஆய்வு செய்யும் வழியில்,முதல்வர் மு.க.ஸ்டாலின் பேருந்தில் திடீரென பயணம் மேற்கொண்டார். 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து பொதுமக்களை பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தினசரி முகாம்கள் நடந்தாலும் கூட, ஞாயிற்றுக்கிழமைகளில் கடந்த 5 வாரமாக மெகா சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இதன்மூலம் தடுப்பூசி இலக்கை நெருங்க முடிவதால் இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.

இதனால் தமிழகம் முழுவதும் மெகா முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துரைப்பாக்கம் கண்ணகி நகரில் 5 இடங்களில் நடந்த சிறப்பு முகாமினை ஆய்வு செய்தார். அப்போது தியாகராயா நகரில் இருந்து கண்ணகி நகருக்கு மாநகர பஸ் ஒன்று வந்தது. அந்த பஸ்சில் மு.க.ஸ்டாலின் ஏறி அதில் பயணம் செய்த பெண்களிடம் இலவச பயணம் குறித்து விசாரித்தார்.

அரசு வழங்கும் இலவச பயணம் வசதியாக இருக்கிறதா? குறிப்பிட்ட நேரத்திற்கு பஸ் வருகிறதா? இருக்கைகள் வசதியாக உள்ளதா? என்று அவர் கேட்டார். அதற்கு அவர்கள் இலவச பயணம் எங்களுக்கு மிகுந்த பயன் உள்ளதாக இருக்கிறது என்று தெரிவித்தனர். இந்த ஆய்வின்போது பொதுமக்கள் அவரிடம் கோரிக்கை மனுக்களையும் கொடுத்தனர். அதை அவர் அன்போடு வாங்கிக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இந்த ஆய்வின்போது தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி கமி‌ஷனர் ககன்தீப் சிங் பேடி, வீரராகவ ராவ் ஐ.ஏ.எஸ். அதிகாரி மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., அரவிந்த் ரமேஷ் எம்.எல்.ஏ. உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory