» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி: நாளை முதல் அமல்!

வியாழன் 25, ஏப்ரல் 2024 3:41:37 PM (IST)

மணிமுத்தாறு அருவியில் பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், நாளை முதல் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அம்பாசமுத்திரம் புலிகள் காப்பகம் துணை இயக்குநர் / வன உயிரினக் காப்பாளர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், "களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக்கோட்டம், அம்பாசமுத்திரம் வனச்சரகத்திலுள்ள சூழல் சுற்றுலாப் பகுதியான மணிமுத்தாறு அருவிப் பகுதியில் டிசம்பர் 2023-ம் மாதத்தில் பெய்த கனமழையால் பொது மக்கள் நின்று குளிக்கக்கூடிய இடங்கள் முழுவதுமாக சேதம் அடைந்திருந்தது. 

பொது மக்கள் நலன்கருதி மணிமுத்தாறு அருவிப்பகுதியில் குளிப்பதற்கு தடைவிதிக்கபட்டிருந்த நிலையில், தற்போது ஆண்கள் பெண்கள் தனித்தனியாக நின்று குளிக்கும் வகையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மணிமுத்தாறு அருவிப்பகுதியில் பணிகள் நிறைவடைந்த நிலையில் வருகின்ற 26.04.2024 (வெள்ளிக்கிழமை) முதல் பொதுமக்கள் மணிமுத்தாறு அருவியில் குளிப்பதற்கு காலை 8 மணி முதல் மதியம் 3 வரை வன விதிகளுக்குட்பட்டு அனுமதி வழங்கப்படுகின்றது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory