» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழக காவல்துறையில் 10,978 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

திங்கள் 21, செப்டம்பர் 2020 12:49:31 PM (IST)

தமிழக காவல்துறையில் இரண்டாம் நிலை காவலா், இரண்டாம் நிலை சிறைக்காவலா் மற்றும் தீயணைப்புத்துறை மீட்புப் பணிகள் துறையில் காலியாக உள்ள 10,978 பணியிடங்களுக்கு அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வுக் குழுமம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியான இளைஞர்களிடம் இருந்து (இருபாலர்) வரும் 26-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: காவலர்கள்

மொத்த காலியிடங்கள்: 10,978

சம்பளம்: மாதம் ரூ.18,200 - 52,900

தகுதி: 10-ஆம் வகுப்புத் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 18 வயது நிரம்பியவராகவும், 24 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். பிற்படுத்தப்பட்டோா், ஆதிதிராவிடா் உள்ளிட்டோருக்கு வயது வரம்பில் தளா்வும் அளிக்கப்படுகிறது. 

விண்ணப்பிக்கும் முறை: இப்பணியிடங்களுக்கு, வருகிற 26-ஆம் தேதி முதல் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க முடியும். இதர முறையில் விண்ணப்பித்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

தேர்வு கட்டணம்: ரூ.130. இதனை ஆன்லைனில் செலுத்தலாம். 
 
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தோ்வு, உடற் திறன் மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

எழுத்துத் தேர்வு 80 மதிப்பெண்களும், உடற் திறன் தோ்வுக்கு 15 மதிப்பெண்கள், 5 சிறப்பு மதிப்பெண்கள் மொத்தம் 100 மதிப்பெண்களுக்குத் தோ்வு நடைபெறும். 

விண்ணப்பிக்கும் முறை: https://www.tnusrbonline.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.10.2020 

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: டிசம்பா் 13-ஆம் தேதி 37 மாவட்டங்களில் நடைபெறுகிறது.

மேலும் விவரங்களுக்கு, https://www.tnusrbonline.org அல்லது https://www.tnusrbonline.org/pdfs/CR_2020_Notification.pdf என்ற இணையதள அறிவிப்பு லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory