» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தனிமைப்படுத்தப்பட்டவர்களை தங்கள் பகுதிகளில் வைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

புதன் 1, ஏப்ரல் 2020 1:24:50 PM (IST)கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மேலகரம் குற்றாலம் பகுதியில்  6 பேரை தனிமைப்படுத்தி வைத்ததற்கு அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

டெல்லி நிஜாமுதீன் பகுதியில்  நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் மாநிலம் முழுவதும் தங்களது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர் இவர்களில் தென்காசி மாவட்டம் புளியங்குடி வாசுதேவநல்லூர் கடையநல்லூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 6 பேர்களை சுகாதாரத்துறையினர் கண்டறிந்தனர்.இவர்களை தனிமைப்படுத்தும் விதமாக தென்காசியை அடுத்த மேலகரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் 6 நபர்கள் தனிமைப் படுத்தப்பட்டு இருந்தனர். இதை அறிந்த மேலகரம் பகுதி பொதுமக்கள் தனிமைப் படுத்தப்பட்ட நபர்களை எங்கள் பகுதியில் வைக்கக்கூடாது அவர்களை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்று கூறி கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தகவலறிந்த குற்றாலம் காவல்துறையினர் மற்றும் வருவாய் துறை,  சுகாதாரத் துறையினர் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனாலும் பொதுமக்கள் தரப்பில் இதற்கு சம்மதம் தெரிவிக்காததால் 6 பேர்களையும் குற்றாலத்தில் உள்ள ஒரு விடுதிக்கு மாற்றுவதாக உறுதி அளித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர் இதனால் மேலகரம் பகுதியில்  பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இந்நிலையில் அவர்களை குற்றாலம் பேரூராட்சிக்கு சொந்தமான விடுதியில் தனிமைப்படுத்த அதிகாரிகள் முடிவு செய்து அழைத்து சென்றனர். இதை அறிந்த அந்தப் பகுதியில் வசிக்கும் துப்புரவு தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

அதையும் மீறி அதிகாரிகள் அந்த விடுதியில் அவர்களைத் தனிமைப் படுத்தினார்கள்.இதனால் குற்றாலம் பேரூராட்சியில் பணிபுரியும் சுமார் 50க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலைக்கு செல்லாமல் புறக்கணித்தனர்.தகவலறிந்த காவல்துறை, சுகாதாரத் துறை, வருவாய் துறை, உள்ளாட்சித் துறை, அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து துப்புரவு தொழிலாளர்கள் இடத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory