» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இன்றுடன் ஓய்வுபெறும் மருத்துவ ஊழியர்களுக்கு பணி நீட்டிப்பு: தமிழக அரசு உத்தரவு

செவ்வாய் 31, மார்ச் 2020 4:26:13 PM (IST)

இன்றுடன் ஓய்வு பெறும் மருத்துவர்கள், நர்சுகள் மற்றும் மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்கள் அனைவருக்கும் 2 மாதங்களுக்கு பணி நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 67-லிருந்து 74ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். 

இதில் இன்றுடன் ஓய்வு பெறும் மருத்துவர்கள், நர்சுகள் மற்றும் மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்கள் அனைவருக்கும் 2 மாதம் பணி நீட்டிப்பு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மார்ச் 31-ந்தேதியுடன் ஓய்வு பெறும் மருத்துவர்கள், நர்சுகள் மற்றும் மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்கள் என அனைவருக்கும் 2 மாதம் பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், ஒப்பந்த முறையில் மேலும் 2 மாதங்கள் பணி நீட்டித்து தற்காலிக பணி ஆணை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுநலன் கருதி அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory