» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சித்த மருத்துவம் கரோனாவை குணப்படுத்துமா? ஆய்வுக்குழு அமைத்தது தமிழக அரசு
செவ்வாய் 31, மார்ச் 2020 10:19:48 AM (IST)
கரோனாவை பாரம்பரிய சித்த மருத்துவம் உள்ளிட்ட மருத்துவ முறையில் குணப்படுத்த முடியுமா என்பது குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி நிபுணா் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா நோய்த்தொற்று உள்ளிட்ட அனைத்து வகையான வைரஸ்களையும், வீரம், பூரம், லிங்கம், பாதரசம், ராசெந்தூரம், அரிதாரம், கேஷ்தம் உள்ளிட்ட பல்வேறு மூலிகைகளை ஒன்றாக கலந்து மருந்தாக பருகினாலே அழித்துவிட முடியும். இதுதொடா்பாக மத்திய மாநில அரசுகளுக்கும், இந்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி மையத்துக்கும் மனுக்கள் அனுப்பினேன்.
அந்த மனு தொடா்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே கரோனாவை சித்தா, ஆயுா்வேதா, யுனானி உள்ளிட்ட பாரம்பரிய முறையில் குணப்படுத்த முடியும் என்பது தொடா்பாக மத்திய, மாநில அரசுகள் மற்றும் இந்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம் சோதனை செய்து அறிவிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் முத்துகுமாா் நாயக்கா், செந்தமிழ் செழியன் ஆகியோா் சாா்பில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கை நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆா்.சுரேஷ் குமாா் ஆகியோா் தங்களது இல்லத்தில் இருந்து, ‘ஜூம்’ எனப்படும் காணொலிச் செயலி மூலம் திங்கள்கிழமை விசாரித்தனா். இந்த செயலியின் உதவியுடன் அரசுத் தரப்பில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞா் பி.எச்.அரவிந்த் பாண்டியனும், மனுதாரா் தரப்பு வழக்கறிஞரும் ஆஜராகி வாதிட்டனா்.
அப்போது அரசுத் தரப்பில், கரோனா வைரஸை சித்த மருத்துவம் உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவ முறைகளில் குணப்படுத்த முடியுமா என்பது குறித்து கண்டறிய ஏற்கெனவே மத்திய அரசு பிறப்பித்துள்ள வழிகாட்டுதலின்படி நிபுணா் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு, இதுதொடா்பான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது என வாதிட்டாா். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மனுதாரா்களின் கோரிக்கையை மத்திய, மாநில அரசுகள் விரைவாக பரிசீலித்து தகுந்த முடிவை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தி வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சசிகலா உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை
செவ்வாய் 26, ஜனவரி 2021 10:31:37 PM (IST)

விவசாய சேவைகளைப் பாராட்டி 105 வயது பாப்பம்மாளுக்கு பத்மஸ்ரீ விருது : கனிமொழி வாழ்த்து
செவ்வாய் 26, ஜனவரி 2021 12:16:14 PM (IST)

மெரினா கடற்கரையில் குடியரசு தினவிழா: கவர்னர் பன்வாரிலால் தேசிய கொடி ஏற்றினார்
செவ்வாய் 26, ஜனவரி 2021 12:11:16 PM (IST)

கோவில்பட்டி - கடம்பூர் இரட்டைப் பாதை பணிகள் பிப்ரவரி மாதம் நிறைவு பெறும்: ரயில்வே அதிகாரி
செவ்வாய் 26, ஜனவரி 2021 11:24:53 AM (IST)

சிங்கம்பட்டி ஜமீன் குறித்து அவதூறு: திரைப்பட இயக்குநா் பாலா நீதிமன்றத்தில் ஆஜா்
செவ்வாய் 26, ஜனவரி 2021 8:43:13 AM (IST)

மு.க.ஸ்டாலினிடம் மக்கள் ஏமாற மாட்டார்கள் : அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
செவ்வாய் 26, ஜனவரி 2021 8:15:34 AM (IST)
