» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஊரடங்கை மீறும் மக்கள் மீது உரிய நடவடிக்கை : தமிழ்நாடு அரசு உத்தரவு

ஞாயிறு 29, மார்ச் 2020 7:06:39 PM (IST)

கரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் முன்னெச்சரிக்கையாக 21 நாள் ஊரடங்கு, மற்றும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கை மீறும் பொதுமக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

ஊரடங்கை மீறும் மக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அந்தந்த மாவட்ட, மாநகராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு வருவாய் நிர்வாக ஆணையர் ஜெ. ராதாகிருஷ்ணன் இன்று தெரிவித்துள்ளார். சென்னை எழிலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அரசாணை எண். 174, நாள் 28.3.2020ன் படி விவாசாயம் சார்ந்த பணிகள் நடைபெறுவதற்கு ஊரடங்கிலிருந்து தடை நீக்கப்படுகிறது.

விவசாயப் பொருள் கொள்முதல் நிறுவனங்கள், விவசாய விளை பொருட்கள் மார்க்கெட் கமிட்டி நடத்தும் மண்டிகள், உர விற்பனை நிலையங்கள், விவசாயப் பணிகள் மற்றும் விவசாய கூலிப்பணி, விவசாய இயந்திரங்கள் வாடகை மையங்கள், உரம், விதைகள், பூச்சிக்கொல்லி தயாரிப்பு மற்றும் பேக்கிங் நிறுவனங்கள், மாநிலம் மற்றும் மாநிலங்களுக்கிடையேயான விவசாயம் மற்றும் தோட்டக்கலை சார்ந்த இயந்திரங்களின் இயக்கம் உள்ளிட்ட விவசாயம் சார்ந்த பணிகளுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக ஜெ, ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்,


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory