» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அரசுப் பேருந்துக்கு வேப்பிலை கட்டி, மஞ்சள் தெளித்த கிராம மக்கள்!

சனி 21, மார்ச் 2020 8:26:21 PM (IST)

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க கோவை மாவட்டத்தில் அரசுப் பேருந்து ஒன்றிக்கு கிராம மக்கள் வேப்பிலை கட்டி, மஞ்சள் தெளித்த சம்பவம் நடந்துள்ளது.

அரசுப் போக்குவரத்துக் கழகம், கோவை மண்டலத்தில், 300 - க்கும் மேற்பட்ட மாநகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக, பேருந்துகளில் மக்கள் கூட்டம் பெருமளவு குறைந்துள்ளது. கரோனா பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக பேருந்து சக்கரங்கள், இருக்கைகள், கம்பிகள் உள்ளிட்ட பேருந்துகளின் அனைத்துப் பகுதிகளிலும், சுகாதாரப் பணியாளர்கள் கிருமி நாசினி தெளிப்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், கரோனா நோய்த் தொற்று பாதுகாப்பு நடவடிக்கையாக, கோவை காந்திபுரத்தில் இருந்து பேரூர், மாதம்பட்டி, ஆலாந்துறை வழித்தடத்தில்  நாதேகவுண்டன்புதூர்  வரை இயக்கப்பட்டு வருகின்ற அரசுப் பேருந்து 14-இல், நாதேகவுண்டன்புதூர்  கிராம மக்கள் பேருந்துகளின் வெளிப்புறம், உள்புறங்களில்  வேப்பிலை, துளசியை கொத்துக் கொத்தாகச் செருகி வைத்தும், பேருந்தின் படிக்கட்டுகள் மற்றும் நடைமேடையில் மாட்டுச்சாணம், மஞ்சள் கரைசலைக் கலந்தும் தெளித்துள்ளனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory