» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சனி 21, மார்ச் 2020 3:33:46 PM (IST)

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

உலகநாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரசால் இதுவரை 10ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 170 நாடுகளில் 2½ லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் நாளை மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. 

இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகிற 27-ம் தேதி  10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்க இருந்தன. ஆனால் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்காமல் இருக்க தேர்வை ஒத்தி வைக்கும்படி பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.  இதையடுத்து தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ஏப்ரல் 14-ம் தேதிக்கு பிறகு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் எனவும் 11 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் ஏற்கனவே அறிவித்தபடி நடைபெறும் எனவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory