» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தற்போதைய ஆட்சியாளர்களால் நாடு முழுவதும் போராட்டம் : தூத்துக்குடியில் மு.க.ஸ்டாலின் பேச்சு

சனி 15, பிப்ரவரி 2020 6:38:05 PM (IST)

மத்தியிலும், மாநிலத்திலும் தற்போது ஆட்சி நடத்துபவர்களால் நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகிறது என தூத்துக்குடியில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மற்றும் தூத்துக்குடி எம்எல்ஏ.,கீதாஜீவன், ஜீவன்ஜேக்கப் தம்பதியினரின் மகன் மகிழ்ஜான் சந்தோஷ், கீர்த்தனா பிராங்க் கிருபா திருமணம் சேலத்தில் கடந்த 12 ம் தேதி நடைபெற்றது. தொடர்ந்து இன்று தூத்துக்குடி எட்டயபுரம் ரோட்டிலுள்ள ஏவிஎம் கமலவேல் மஹாலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். தொடர்ந்து அவர் பேசியதாவது, திமுக குடும்பம் பாசம் உள்ள கட்சியாகும். பல்வேறு அரசியல் கட்சியினர் இந்த திருமண விழாவில் பங்கேற்று இருப்பதால் இதில் அரசியல் பேச விரும்பவில்லை நாட்டிலே இன்று ஏற்பட்டுள்ள நிலைமைகள் உங்களுக்கு நன்றாக தெரியும்.

மத்தியிலும், மாநிலத்திலும் தற்போது ஆட்சி நடத்துபவர்களால் நாடு முழுவதும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என தமிழகம் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் நடைபெற்று கொண்டிருக்கிறது, அது எதற்கு என்பது உங்களுக்கு தெரியும்.உங்கள் பிரச்சனைகளுக்காக, நலனுக்காக யார் பாடுபடுவார்கள் என்பதை சிந்தித்து பார்த்து வருங்காலங்களில் அதற்கு தக்கபடி நடக்க வேண்டும் என பேசினார். இந்த விழாவில் கனிமொழி எம்பி., உள்ளிட்ட முக்கிய திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து

ப. சுகுமார்Feb 15, 2020 - 11:03:51 PM | Posted IP 108.1*****

மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory