» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஊக்கமருந்து சோதனையில் கோமதி மாரிமுத்து தோல்வி: 4 ஆண்டுகள் தடை விதிக்க வாய்ப்பு

புதன் 22, மே 2019 10:26:45 AM (IST)

தோஹாவில் கடந்த மாதம் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் தடகளப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற தமிழக தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்து, ஊக்கமருந்து சோதனையில் தோல்வி அடைந்ததையடுத்து, அவருக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் தோஹாவில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில் தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து 800 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்றார். இதில் 2 நிமிடம் 2.70 வினாடிகளில் இலக்கை அடைந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.  அப்போது கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து சோதனைக்காக அவரின் சிறுநீர் (ஏ சாம்பிள்) பெறப்பட்டது. ஆசிய தடகள சம்மேளம் நடத்திய ஊக்கமருந்து சோதனையில் கோமதி மாரிமுத்து தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை எடுத்துக்கொண்டது தெரியவந்துள்ளது.இதன் மூலம் ஆசிய தடகளப் போட்டியில் இந்தியா சார்பில் பெற்ற ஒரு தங்கப்பதக்கம் பறிபோகிறது. அந்த தொடரில் இந்தியா 3 தங்கம், 7 வெள்ளி, பல வெண்கலப்பதக்கங்களையும் கைப்பற்றியது. 

இப்போது, அதில் ஒரு தங்கம் பறிபோயுள்ளது. மேலும், அவரின் பி மாதிரி சோதனையும் உறுதிச் செய்யப்பட்டால் கோமதி மாரிமுத்துவுக்கு 4 ஆண்டுகள் தடைவிதிக்கப்படும் என்று இந்திய தடகள சம்மேளனம் தெரிவித்துள்ளது.தோகாவில் தங்கம் வென்ற தமிழக தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்து, தான் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக வெளியான செய்தியை மறுத்துள்ளார். இதுதொடர்பாக, கோமதி மாரிமுத்துவின் சகோதரர் சுப்ரமணி கூறுகையில், கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தியதாக வெளிவரும் செய்தி முற்றிலும் வதந்தி. இந்திய தடகள கூட்டமைப்பிடமிருந்து எங்களுக்கு எந்த வித தகவல்களும் வரவில்லை என தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து

அருண்மே 22, 2019 - 07:09:48 PM | Posted IP 157.5*****

பிராண்டட் கம்பெனிகளுக்கு விளம்பரத்துக்கு நடிக்க ஒத்துகிட்டு இருக்க மாட்டாங்க. அதுனால.. இப்டி..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory