» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குளச்சலில் திமிங்கலப் புள்ளி சுறா கரை ஒதுங்கியது: மீன்வளத் துறையினர் ஆய்வு
புதன் 15, ஏப்ரல் 2026 3:43:00 PM (IST)

குமரி மாவட்டம் குளச்சல் அருகே கடற்கரையில் அரிய வகை திமிங்கலப் புள்ளி சுறா ஒன்று கரை ஒதுங்கியது. இது குறித்து மீன்வளத் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டம், குளச்சல் ‘ஏ’ கிராமத்திற்கு உட்பட்ட கொட்டில்பாடு கடற்கரை பகுதியில் இன்று பெரிய அளவிலான திமிங்கலப் புள்ளி சுறா ஒன்று கரை ஒதுங்கியது. இதனைப் பார்த்த உள்ளூர் மக்கள் மற்றும் மீனவர்கள் உடனடியாக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இது குறித்து உள்ளூர் மீனவர்கள் கூறுகையில், கடந்த சில நாட்களாகக் கடலில் ஏற்பட்டுள்ள நீரோட்ட மாற்றங்கள் மற்றும் அலைகளின் சீற்றம் காரணமாக, இவ்வகை கடல் உயிரினங்கள் திசைமாறி கரைக்கு நெருங்கி வந்திருக்கலாம் எனத் தெரிவித்தனர்.
திமிங்கலப் புள்ளி சுறாக்கள் அளவில் பெரியவையாக இருந்தாலும், அவை மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்காதவை. இவை இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட உயிரினப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
கரை ஒதுங்கிய இந்த சுறா உயிருடன் உள்ளதா அல்லது இறந்த நிலையில் உள்ளதா என்பது குறித்து மீன்வளத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் முடிவிலேயே அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜூன் 1 முதல் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க அரசு ஆணை: குமரி மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி!
சனி 30, மே 2026 4:02:42 PM (IST)

கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்ல அனுமதி : அனிதா கருத்துக்கு மனோ தங்கராஜ் எதிர்ப்பு!
சனி 30, மே 2026 11:33:26 AM (IST)

நாகர்கோவில்-எழும்பூர் இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம்: தெற்கு ரயில்வே தகவல்
சனி 30, மே 2026 10:41:53 AM (IST)

இரத்த தானம் வழங்குவதில் மருத்துவ பணியாளர்கள் முன்மாதிரி : அமைச்சர் ராஜேஷ் குமார் பெருமிதம்!
வெள்ளி 29, மே 2026 3:59:42 PM (IST)

கன்னியாகுமரி வந்த விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்!
வியாழன் 28, மே 2026 8:29:39 PM (IST)

நாகர்கோவில் – கோவை அதிவிரைவு ரயிலில் கூடுதல் பொதுப்பெட்டி இணைப்பு: தற்காலிக நடவடிக்கை!
வியாழன் 28, மே 2026 8:23:21 PM (IST)


