» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தமிழ்ச்செம்மல் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு : ஆட்சியர் தகவல்
வெள்ளி 1, ஆகஸ்ட் 2025 5:45:55 PM (IST)
தமிழ் வளர்ச்சித் துறையில் தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபடும் ஆர்வலர்களைக் கண்டறிந்து அவர்களின் தமிழ்த் தொண்டினை பெருமைப்படுத்தி ஊக்கப்படுத்தும் வகையில் ´தமிழ்ச் செம்மல்´ என்ற விருது ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் தெரிவு செய்து அவர்களுக்கு தமிழ்ச்செம்மல் விருதும், ரூ.25,000/- பரிசுத் தொகையும், தகுதியுரையும் 2015 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. எனவே மாவட்டங்களில் தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபடும் ஆர்வலர்களைக் கண்டறிந்து அவர்களிடமிருந்து தன்விவரக் குறிப்புகளுடன் விண்ணப்பங்களைப் பெற்று அதில் தகுதியானவர்களின் விண்ணப்பங்களை தொகுத்து அனுப்புமாறு சென்னைத் தமிழ் வளர்ச்சி இயக்குநர் தெரிவித்துள்ளார்கள். எனவே 2025-ஆம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருதுக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபடும் தமிழ் ஆர்வலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ் வளர்ச்சித் துறையின் வலைதளத்திலிருந்து விண்ணப்பங்களை (https:// tamilvalarchithurai.tn.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பிப்பவர்கள் தன்விவரக் குறிப்புடன் (இரண்டு நகல்), கடவுச்சீட்டு அளவு நிழற்படம் (இரண்டு), அவர்கள் ஆற்றிய தமிழ்ப்பணி ஆகிய விவரங்களுடன் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், இரண்டாம் தளத்தில் அமைந்துள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் 25.08.2025ஆம் நாளுக்குள் அளிக்கப்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தோவாளை ஊராட்சி ஒன்றியத்தில் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள்: ஆட்சியர் அழகுமீனா ஆய்வு
திங்கள் 4, ஆகஸ்ட் 2025 4:19:27 PM (IST)

குமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி களப பூஜை தொடங்கியது: திரளான பக்தர்கள் தரிசனம்!
திங்கள் 4, ஆகஸ்ட் 2025 12:03:43 PM (IST)

40 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் முழு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்: ஆட்சியர்
சனி 2, ஆகஸ்ட் 2025 4:25:20 PM (IST)

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு இலவச செல்போன் பழுதுபார்த்தல் பயிற்சி
சனி 2, ஆகஸ்ட் 2025 3:32:12 PM (IST)

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி களப பூஜை விழா ஆக.4-ம் தேதி தொடங்குகிறது!
வெள்ளி 1, ஆகஸ்ட் 2025 11:48:35 AM (IST)

சதாவதானி செய்குதம்பி பாவலர் 151-வது பிறந்த நாள்: ஆட்சியர் மரியாதை செலுத்தினார்!
வியாழன் 31, ஜூலை 2025 12:41:20 PM (IST)
