» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பத்மநாபபுரம் தொகுதியில் ரூ.2.79 கோடி மதிப்பில் சாலை மறுசீரமைப்பு பணிகள் தொடக்கம்!

செவ்வாய் 29, ஜூலை 2025 5:36:45 PM (IST)



பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.2.79 கோடி மதிப்பில் சாலை மறுசீரமைப்பு பணிகளை - பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி பத்மநாபபுரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மறுசீரமைக்கப்படவுள்ள சாலை பணிகளை பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் துவக்கி வைத்து தெரிவிக்கையில்- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டிற்குட்பட்ட அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் முதலமைச்சரின் கிராம சாலைகள் திட்டம், விரிவான சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் வாயிலாக பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை அறிவித்தும் அதற்கான நிதி ஒதுக்கீடு மேற்கொண்டு சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.

அதனடிப்படையில் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி பத்மநாபபுரம் நகராட்சிக்குட்பட்ட உதயகிரி கோட்டை சாலை ரூ.88 இலட்சம் மதிப்பிலும், பட்டாணி குளம் தெரு முதல் மேலாங்கோடு வரை உள்ள சாலை ரூ.67.40 இலட்சம் மதிப்பில் மறுசீரமைக்கபடவுள்ளது. மேலும் ரூ.70.70 இலட்சம் மதிப்பில் பட்டாணி குளம் தெரு, கீழக்குளம் தெரு, மேலாங்கோடு சாலை, செட்டி தெரு, ஆர்.சி சர்ச் சாலை, அஞ்சலி விளை தெரு, சந்தை தெரு, ராமன்பரம்பு சாலை, மணலி தெரு ஆகிய இடங்களில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணியும், ரூ.53 இலட்சம் மதிப்பில் தைக்காரப்பள்ளி, கிருஷ்ணப்புரம் சாலை, இரணியல் சாலை தெரு, குமாரகோவில் தெரு, செட்டி தெரு, ஆர்.சி தெரு, சாரோடு தெரு, வெட்டிக்கோணம் தெரு, பெருமாள் கோவில் தெரு ஆகிய இடங்களில் அலங்கார தரை கற்கள் பதிக்கும் பணியும் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

இச்சாலை தரமானதாக இருக்கவும், விரைந்து பணியினை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நகராட்சி நிர்வாகம், துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். நிகழ்ச்சியில் பத்மநாபபுரம் நகர்மன்ற தலைவர் அருள்சோபன், துறை அலுவலர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory