» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

சாகர் மித்ரா திட்டத்தில் காலிப் பணியிடங்கள் நியமனம் : விண்ணப்பங்கள் வரவேற்பு!

சனி 19, ஜூலை 2025 11:55:09 AM (IST)

பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் (PMMSY) கீழ் சாகர் மித்ரா ஒப்பந்த முறையில் காலிப் பணியிடங்கள் நியமனம் தொடர்பாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் (PMMSY) கீழ் சாகாமித்ரா என்ற முற்றிலும் ஒப்பந்த அடிப்படையிலான பணியிடத்திற்கு 8 மாதங்களுக்கு பணிபுரிய கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடலோர மீனவ கிராமங்களில் காலியாக உள்ள இரண்டு பணியிடத்திற்கு கிள்ளியூர் தாலுக்காவை சார்ந்த கீழ்காணும் தகுதியுடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

கல்வி தகுதி:

மீன்வள அறிவியல் (Fisheries Science)

கடல் உயிரியல் (Marine Biology) மற்றும் விலங்கியல் (Zoology) ஆகிய இளங்கலை பட்டப்படிப்புடன் , இளங்கலை அறிவியல் (இயற்பியல்/ வேதியியல்/ நுண்ணுயிரியல்/ தாவரவியல்/ உயிர் வேதியியல்)

(Bachelor of Science – Physics/Chemistry/Microbiology/ Botany/ Biochemistry)
கூடுதலாக, தகவல் தொழில் நுட்பம் (Information Technology) தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்

வயது வரம்பு : 01.01.2025 அன்றைய நாளில் 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். 

விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டிய கடைசி நாள் : 31.07.2025 

மேலும், இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, உதவி இயக்குநர் அலுவலகம், முக்கட்டுவிளை, தேங்காபட்டணம் அஞ்சல் -629173, முகவரியில் செயல்பட்டு வரும் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory