» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பொதுமக்கள் தன்னார்வமாக இரத்த தானம் செய்திட முன்வர வேண்டும்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா
சனி 14, ஜூன் 2025 3:13:52 PM (IST)

இரத்தம் வழங்குவதன் மூலம் பல உயிர்களை காப்பாற்ற முடியும். பொதுமக்கள் தன்னார்வமாக இரத்த தானம் செய்திட முன்வர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா பேசினார்.
கன்னியாகுமரி மாவட்டம், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று நடைபெற்ற உலக இரத்த கொடையாளர் தின விழாவில் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, கலந்து கொண்டு, அதிக முறை ரத்தம் தானம் செய்தவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி, பேசுகையில் "கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக அளவில் இரத்த கொடையாளர்கள் கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பல்வேறு தரப்பட்ட மக்கள் தானாக முன்வந்து இரத்தம் வழங்கி வருகிறார்கள். அரசு மருத்துவமனைகளில் கர்ப்பிணி பெண்களுக்கும் இரத்த சோகையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அதிக அளவு இரத்தம் தேவைப்படுகிறது.
இரத்த வங்கிகளில் தேவையான இரத்தத்தினை இருப்பு வைத்து கொள்ள வேண்டும். அதிக அளவு இரத்தம் தேவைப்படும் நேரங்களில் இரத்த கொடையாளர்கள், தன்னார்வலர்கள் கல்லூரி மாணவ மாணவியர்களிடம் பெற்று உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க வேண்டும். இரத்த கொடையாளர்களும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை தொடர்ந்து இரத்தம் வழங்குவதன் மூலம் பல உயிர்களை காப்பாற்ற முடியும். எனவே பொதுமக்கள் தன்னார்வமாக இரத்த தானம் செய்திட முன்வர வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.அழகுமீனா, பேசினார்.
நடைபெற்ற விழாவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் இராமலட்சுமி, மருத்துவ கண்காணிப்பாளர் கிங்ஸ்லி ஜெபசி, இணை இயக்குனர் குடும்ப நலம் ரவிக்குமார் துணை முதல்வர்.சுரேஷ் பாலன், உறைவிட மருத்துவர்வர்கள் விஜயலட்சுமி, ரெனிமோள், இரத்த வங்கி மருத்துவர் மரு .ராகேஷ் துறை அலுவலர்கள், பொதுமக்கள், இரத்த கொடையாளர்கள், கல்லூரி மாணவ மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சதாவதானி செய்குதம்பி பாவலர் 151-வது பிறந்த நாள்: ஆட்சியர் மரியாதை செலுத்தினார்!
வியாழன் 31, ஜூலை 2025 12:41:20 PM (IST)

குமரி கடற்கரை கிராமங்களை பாதுகாக்க சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும்: விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை!
புதன் 30, ஜூலை 2025 8:23:14 PM (IST)

தூய்மை பணியாளர்களின் அர்ப்பணிப்பு மிகவும் மதிக்கதக்கது: நல வாரிய தலைவர் பெருமிதம்
புதன் 30, ஜூலை 2025 4:08:50 PM (IST)

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் ஆடி மாத நிறை புத்தரிசி பூஜை
புதன் 30, ஜூலை 2025 4:01:09 PM (IST)

நாகர்கோவில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம் முறிந்து விழுந்தது!
புதன் 30, ஜூலை 2025 11:13:01 AM (IST)

பத்மநாபபுரம் தொகுதியில் ரூ.2.79 கோடி மதிப்பில் சாலை மறுசீரமைப்பு பணிகள் தொடக்கம்!
செவ்வாய் 29, ஜூலை 2025 5:36:45 PM (IST)
