» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தோவாளை கால்வாய் பகுதியில் அதிகாரிகள் ஆய்வு
வியாழன் 12, ஜூன் 2025 5:46:04 PM (IST)

தோவாளை கால்வாய் பகுதியில் குமரி மாவட்ட நிர்வாகம் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
ஜுன் முதல் தேதி முதல் பேச்சிப்பாறை அணையிலிருந்து பாசனத்திற்கு நீர் மாவட்ட ஆட்சியரால் திறந்து விடப்பட்டது. இந்நிலையில் தோவாளை கால்வாயில் தண்ணீர் வரவில்லை என்றும் விவசாயிகளால் நாற்று நட இயலவில்லை எனவும் சில பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகி இருந்தது.
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி நேர்முக உதவியாளர் (விவசாயம்) ஜே.ஜென்கின் பிரபாகர் மற்றும் வேளாண்மை துணை இயக்குநர் ஆரோக்கிய அமல ஜெயன் ஆகியோர் செண்பகராமன்புதூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள நெல் வயல்களை பார்வையிட்டதில் தோவாளை கால்வாயில் முழு அளவு தண்ணீர் சென்று கொண்டிருப்பதும், தோவாளை கால்வாயின் கிளை கால்வாய்கள் மற்றும் வயல்களை சென்றடையும் கால்வாய்கள் முழுவதுமாக தண்ணீர் நிரம்பி செல்வதும் பார்வையிடப்பட்டது.
எனவே தொடர்ந்து விவசாயிகள் நாற்று நடும் பணியிலும் இதர விவசாய பணிகளையும் மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தோவாளை வட்டார விவசாயிகள் முன்னேற்ற கிராமசபா உறுப்பினர் திருவள்ளுவன் மற்றும் விவசாயிகளான செந்தில், கண்ணன், பரமேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் வேளாண்மைத்துறை களப்பணியாளர்களும் ஆய்வின்போது உடன் இருந்தனர்.
தோவாளை கால்வாயில் ஆங்காங்கே ஏற்பட்டுள்ள சிறு சிறு உடைப்புகளை பழுதுநீக்கம் செய்தால் இடையூறின்றி இன்னும் அதிக அளவில் தண்ணீர் இழப்பின்றி வயல்களுக்கு கிடைக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சதாவதானி செய்குதம்பி பாவலர் 151-வது பிறந்த நாள்: ஆட்சியர் மரியாதை செலுத்தினார்!
வியாழன் 31, ஜூலை 2025 12:41:20 PM (IST)

குமரி கடற்கரை கிராமங்களை பாதுகாக்க சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும்: விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை!
புதன் 30, ஜூலை 2025 8:23:14 PM (IST)

தூய்மை பணியாளர்களின் அர்ப்பணிப்பு மிகவும் மதிக்கதக்கது: நல வாரிய தலைவர் பெருமிதம்
புதன் 30, ஜூலை 2025 4:08:50 PM (IST)

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் ஆடி மாத நிறை புத்தரிசி பூஜை
புதன் 30, ஜூலை 2025 4:01:09 PM (IST)

நாகர்கோவில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம் முறிந்து விழுந்தது!
புதன் 30, ஜூலை 2025 11:13:01 AM (IST)

பத்மநாபபுரம் தொகுதியில் ரூ.2.79 கோடி மதிப்பில் சாலை மறுசீரமைப்பு பணிகள் தொடக்கம்!
செவ்வாய் 29, ஜூலை 2025 5:36:45 PM (IST)
