» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பக்ரீத் பண்டிகை : இஸ்லாமிய மக்களுக்கு விஜய் வசந்த் எம்.பி வாழ்த்து!

வெள்ளி 6, ஜூன் 2025 5:17:32 PM (IST)

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய மக்களுக்கு விஜய் வசந்த் எம்.பி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "இஸ்லாமிய சொந்தங்கள் அனைவருக்கும் தியாகத் திருநாளாம் பக்ரீத் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அன்பு தியாகம் மற்றும் விசுவாசத்தின் பெருநாளாம் பக்ரீத் தினத்தில் அனைவருக்கும் எனது பண்டிகை தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

இந்த நாளில் உங்கள் தியாகங்கள் அங்கீகரிக்கப்பட்டு உங்கள் பிரார்த்தனைகள் பதிலளிக்க படுவதாக. உங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் அமைதி மற்றும் செழிப்பு நிறைந்திட வாழ்த்துகிறேன்.

உங்கள் இல்லங்களில் ஒளி மற்றும் குதுகலத்தால் நிறைத்து தளும்பட்டும். இந்த நாள் சமூகத்தில் அன்பு மற்றும் மகிழ்ச்சியை பரவ செய்யட்டும். உங்கள் தன்னலமற்ற தியாகங்கள் வாயிலாக இயலாதோர் மற்றும் இல்லாதோர் பயன் பெற வேண்டுகிறேன். அனைவருக்கும் அமைதி மற்றும் செழிப்பான பக்ரீத் வாழ்த்துக்கள்!" என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory