» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மதுபோதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியர் பணி இடைநீக்கம்
புதன் 9, அக்டோபர் 2024 12:14:52 PM (IST)
திருவட்டார் அருகே மதுபோதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள செறுகோல் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் நாகர்கோவிலைச் சேர்ந்த ஜார்ஜ் ஹென்றி என்பவர் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
இவர் மது அருந்திவிட்டு பள்ளிக்கு வருவதாகவும், மாணவர்களுக்கு முறையாக பாடம் எடுப்பதில்லை எனவும் புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக பள்ளி மாணவர்கள் பெற்றோரிடம் புகார் தெரிவித்தனர். பெற்றோரும் அந்த பள்ளி தலைமை ஆசிரியரை சந்தித்து, வேறு ஆசிரியரை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்த நிலையில் காலாண்டு விடுமுறை முடிந்து நேற்று முன்தினம் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், தமிழ் ஆசிரியர் ஜார்ஜ் ஹென்றியும் பள்ளிக்கு வந்தார். இதனை அறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து தமிழ் ஆசிரியர் ஜார்ஜ் ஹென்றி பணி இடைநீக்கம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி பாலதண்டாயுதபாணி நடவடிக்கை எடுத்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சாகர் மித்ரா திட்டத்தில் காலிப் பணியிடங்கள் நியமனம் : விண்ணப்பங்கள் வரவேற்பு!
சனி 19, ஜூலை 2025 11:55:09 AM (IST)

முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்: இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்!
சனி 19, ஜூலை 2025 11:38:27 AM (IST)

பேச்சிப்பாறை அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் : ஆட்சியர் திறந்து வைத்தார்!
வெள்ளி 18, ஜூலை 2025 5:27:44 PM (IST)

நாகர்கோவிலில் ஆசிரியர்கள் சாலை மறியல்: பெண்கள் உட்பட100க்கும் மேற்பட்டோர் கைது
வெள்ளி 18, ஜூலை 2025 4:04:20 PM (IST)

பிரதமர் வருகை: சோழமண்டலத்தில் இருந்து ரயில் வருமா? எதிர்பார்ப்பில் குமரி பயணிகள்!
வியாழன் 17, ஜூலை 2025 5:16:18 PM (IST)

பொருட்காட்சியில் நைட்டி அணிந்து குத்தாட்டம் போட்ட இளைஞர்கள்: 7பேர் மீது வழக்குப் பதிவு
வியாழன் 17, ஜூலை 2025 5:02:12 PM (IST)
