» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பெண் வெளியிட்ட வீடியோ எதிரொலி: சுசீந்திரம் கோவிலில் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை!
ஞாயிறு 25, ஜனவரி 2026 1:50:08 PM (IST)
பெண் வெளியிட்ட வீடியோ வைரலானதால் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலுக்குள் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதித்து திருக்கோவில் நிர்வாகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
குமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் உள்ளது. இங்கு சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மூவரும் ஒரே லிங்கத்தில் காட்சியளிப்பதுடன், 18 அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் சிலையும் உள்ளது. இந்நிலையில் கடந்த மார்கழி மாத திருவிழாவின் போது கோவை மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண் குடும்பத்துடன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
அப்போது கோவிலில் உள்ள சிற்பங்கள் மற்றும் மூலஸ்தானம், ஆஞ்சநேயர் சன்னதி என முக்கிய சிற்பங்கள் மற்றும் சாமி சிலைகளை வீடியோ எடுத்ததுடன் அதனை ‘ரீலஸ்’சாக வெளியிட்டனர். இது பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து திருக்கோவில் நிர்வாகம் சார்பில் ‘ரீல்ஸ்’ வெளியிட்ட பெண் மீது சுசீந்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் அந்த பெண்ணை, காவல் நிலையம் வரவழைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்தநிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் யாரும் உள்ளே செல்போன் கொண்டு செல்ல நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதுபற்றி பக்தர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் கோவிலை சுற்றிலும் அறிவிப்பு பதாகைகளும் வைக்கப்பட்டுள்ளது. இதையும் மீறி பக்தர்கள் யாரேனும் செல்போன் கொண்டு சென்று புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தால் அவர்களிடமிருந்து செல்போன் பறிமுதல் செய்யப்படுவதுடன், போலீசில் வழக்கு தொடரப்படும் என்று திருக்கோவில் நிர்வாகம் சார்பில் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வணிக சிலிண்டர் தட்டுப்பாடு: குமரியில் 5,000 உணவகங்கள் மூடும் அபாயம்!
புதன் 11, மார்ச் 2026 8:36:32 PM (IST)

திருமண ஆசை காட்டி நர்ஸ் பாலியல் பலாத்காரம் : 16 லட்சம் மோசடி - மத போதகர் கைது!
செவ்வாய் 10, மார்ச் 2026 8:34:21 AM (IST)

சட்டவிரோதமாக ரயில் முன்பதிவு டிக்கெட் விற்பனை : 5 ஆண்டுகளில் 26 பேர் கைது
செவ்வாய் 10, மார்ச் 2026 8:30:32 AM (IST)

வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து 2 கோடி மோசடி: நகை மதிப்பீட்டாளர் கைது!
செவ்வாய் 10, மார்ச் 2026 8:25:03 AM (IST)

அம்ரித் பாரத் ரயில்: கன்னியாகுமரி மாவட்டம் புறக்கணிப்பு? பயணிகள் அதிருப்தி!
திங்கள் 9, மார்ச் 2026 5:44:32 PM (IST)

கன்னியாகுமரியில் 6,504 கடல் ஆமை முட்டைகள் சேகரிப்பு: 1,448 குஞ்சுகள் கடலில் விடப்பட்டன
திங்கள் 9, மார்ச் 2026 11:18:05 AM (IST)

