» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கன்னியாகுமரியில் 77-வது குடியரசு தினவிழா: ஆட்சியர் அழகுமீனா தேசியக்கொடி ஏற்றினார்!
திங்கள் 26, ஜனவரி 2026 12:43:43 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் 77-வது குடியரசு தினவிழா கோலாகலமாக நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா,தேசியக்கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்க மைதானத்தில் 77-வது குடியரசு தின விழா இன்று (26.01.2026) மிகச் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், முன்னிலையில் தேசியக்கொடியினை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்கள். பின்னர் சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் மூவர்ண பலூன்கள் மற்றும் வெண்புறாக்களை பறக்கவிட்டார்கள்.
அதனைத்தொடர்ந்து காவல்துறையை சார்ந்த 92 பேருக்கு தமிழ்நாடு முதலமைச்சர்அவர்களின் காவலர் பதக்கங்களையும், காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த 124 காவல்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா,வழங்கினார்.
மேலும் தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை வேளாண்மை பொறியில் துறை சார்பில் நலத்திட்ட உதவிகளும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வேளாண்மை உழவர் நலத்துறை ஆகிய துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளும் ஆட்சியர் வழங்கினார்.
மேலும் சிறப்பாக பணிபுரிந்த 263 அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும், அரசு ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் 2024-2025 கல்வி ஆண்டில் 10 மற்றம் 12ம்வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 95 சதவீதம் தேர்ச்சி காட்டிய 20 ஆசிரியர்களுக்குபாராட்டு சான்றிதழ்களும், சமூக நீதி விடுதி பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு நடைபெற்ற பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓட்டப்பந்தயம், நீளம்தாண்டுதல் போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும் மாவட்ட ஆட்சியர்வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து நாகர்கோவில் புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கடியப்பட்டணம் அரசு தொடக்க பள்ளி, மேல்பாலை புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி, ஆனக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி, வடசேரி எஸ்.எம்.ஆர்.வி மேல்நிலைப்பள்ளி, கல்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி, மைலாடி எஸ்.எம்.மெட்ரிக் பள்ளி மாணவ மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில உணவு ஆணையத் தலைவர் என்.சுரேஷ் ராஜன், கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் வ.விஜய் வசந்த், மாவட்ட வன அலுவலர் முனைவர் அன்பு, மாவட்ட வருவாய் அலுவலர் அ.பூங்கோதை, பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா,நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா,உதவி ஆட்சியர் (பயிற்சி) ராகுல் குமார்,நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சு.காளீஸ்வரி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் கு.சுகிதா (பொது),பத்மபிரியா (நிலம்), பழனிவேல் (வளர்ச்சி), கீதா (வேளாண்மை), அன்பு (சத்துணவு), கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் சிவகாமி, தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் சேக் அப்துல் காதர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கிய ராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மோகனா, மாவட்ட வழங்கல் அலுவலர் புஷ்பா தேவி, மாவட்ட விளையாட்டு அலுவலர் வினு,மாவட்ட சமூகநல அலுவலர் விஜயமீனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெண் வெளியிட்ட வீடியோ எதிரொலி: சுசீந்திரம் கோவிலில் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை!
ஞாயிறு 25, ஜனவரி 2026 1:50:08 PM (IST)

நாகராஜா கோவிலில் தைப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
சனி 24, ஜனவரி 2026 12:11:42 PM (IST)

இரணியல், குழித்துறையில் புதிய நிறுத்தம் அனுமதி இல்லை : பயணிகள் ஏமாற்றம்!
வெள்ளி 23, ஜனவரி 2026 12:00:43 PM (IST)

கன்னியாகுமரியில் சுற்றுலா பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் சிவசங்கர்
வெள்ளி 23, ஜனவரி 2026 11:15:57 AM (IST)

கோதையாற்றில் முதலை நடமாட்டம்: படகுகளில் சென்று வனத்துறை தேடுதல் வேட்டை!
வெள்ளி 23, ஜனவரி 2026 10:55:13 AM (IST)

இளம் பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என ஆசை வார்த்தை கூறி மோசடி : பெண் கைது...!
வெள்ளி 23, ஜனவரி 2026 10:50:38 AM (IST)

