» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
வெள்ளமோடி பகுதியில் ரூ.1.60 கோடி மதிப்பில் தார்சாலை பணிகள் தொடக்கம்!
திங்கள் 15, ஜூலை 2024 4:38:01 PM (IST)

வெள்ளிச்சந்தை தேர்வுநிலை பேரூராட்சி வெள்ளமோடி பகுதியில் ரூ.1.60 கோடி மதிப்பில் தார்சாலை பணிகளை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை தேர்வுநிலை பேரூராட்சிக்குட்பட்ட வெள்ளமோடி பகுதியில் மாவட்ட நெடுஞ்சாலை துறையின் சார்பில் சீரமைக்கப்படவுள்ள தார்சாலை பணியினை பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜி.பிரின்ஸ் முன்னிலையில் இன்று (15.07.2024) துவக்கி வைத்து தெரிவிக்கையில் "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டிற்குட்பட்ட அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள்மற்றும் ஊராட்சி பகுதிகளில் முதலமைச்சரின் கிராம சாலைகள் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் வாயிலாக பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை அறிவித்தும் அதற்கான நிதி ஒதுக்கீடு மேற்கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் விரிவான சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டம் 2021-2022 திட்டத்தின் கீழ் ரூ.1.60 கோடி மதிப்பில் வெள்ளிசந்தை தேர்வுநிலை பேரூராட்சிக்குட்பட்ட பேயோடு முதல் வெள்ளமோடி (சாந்தபுரம் சாலை) வரை 3.2 கிலோ மீட்டர் நீளத்தில் சாலை சீரமைக்கும் பணியினை துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இச்சாலை தரமானதாக இருக்கவும், விரைந்து பணியினை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ், தெரிவித்தார்கள்.
நிகழ்ச்சியில் பொதுப்பணி நெடுஞ்சாலை துறை செயற்பொறியாளர் பாஸ்கரன், உதவி செயற்பொறியாளர் விஜயா, உதவி பொறியாளர் ரெஜ்வின், வழக்கறிஞர் சிவராஜ், அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விஜய் முதலமைச்சராகத் தாமதமானதால் தீக்குளித்த விபரீதம் : தவெக நிர்வாகி உயிரிழப்பு!
செவ்வாய் 12, மே 2026 11:50:19 AM (IST)

கழிவு நீக்கம் செய்யப்பட்ட ஈப்பு வாகனம் பொது ஏலம்!
செவ்வாய் 12, மே 2026 10:53:43 AM (IST)

குமரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: நலத்திட்ட உதவிகள் கோரி 166 மனுக்கள்!
திங்கள் 11, மே 2026 5:50:53 PM (IST)

நாகர்கோவில் மாநகராட்சி மேயராக மேரி பிரின்சி லதா பொறுப்பேற்பு: பணிகளைத் தொடங்கினார்!
திங்கள் 11, மே 2026 12:56:39 PM (IST)

பிளஸ் 2 தேர்வில் சாதனை: மாணவிக்கு ஸ்கூட்டர் பரிசளித்த பி.டி. செல்வகுமார்!
திங்கள் 11, மே 2026 12:44:50 PM (IST)

கேரளாவுக்குக் கனிம வளங்கள் கடத்தல் முற்றிலும் நிறுத்தம்: குமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் அறிவிப்பு!
சனி 9, மே 2026 4:08:42 PM (IST)


