» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
காங்கிரஸ் ஒரு ஆபத்தான கட்சி: விஜய்க்கு அர்ஜுன் சம்பத் பகிரங்க எச்சரிக்கை!
வெள்ளி 8, மே 2026 4:43:35 PM (IST)
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைப்பதில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் அறிவுறுத்தியுள்ளார்.
நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்த அர்ஜுன் சம்பத் கூறியதாவது: நாடு முழுவதும் மக்களால் நிராகரிக்கப்பட்டுத் தோற்கடிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியுடன் இணைவதால், தமிழக வெற்றிக் கழகத்திற்கு எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை.காங்கிரஸ் என்பது தமிழர்களுக்கும், மக்களுக்கும் எதிரான ஒரு அமைப்பாகவே செயல்பட்டு வருகிறது. அவர்களின் குறுக்கு வழி அரசியலுக்குப் பலியாகி, விஜய் தனது அரசியல் எதிர்காலத்தைச் சிதைத்துக் கொள்ளக் கூடாது.
பல ஆண்டுகளாகத் தங்களுக்கு ஆதரவாக இருந்த திமுக-வையே காங்கிரஸ் கட்சி இப்போது முதுகில் குத்தியுள்ளது. இதேபோல், ஒருநாள் தமிழக வெற்றிக் கழகத்தையும் காங்கிரஸ் கட்சியினர் முதுகில் குத்துவார்கள் என்பதில் சந்தேகமில்லை.தமிழகத்தில் நிலவும் அரசியல் குழப்பங்களுக்குக் காங்கிரஸ் கட்சியின் சந்தர்ப்பவாத அரசியலே காரணம் என்று குறிப்பிட்ட அவர், புதிய கட்சிகள் பழைய கட்சிகளின் சூழ்ச்சி வலையில் சிக்காமல் கவனமாகச் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவில் அண்ணா விளையாட்டு மைதானம் ரூ.1.19 கோடியில் சீரமைப்பு: ஆட்சியர் ஆய்வு!
புதன் 24, ஜூன் 2026 5:18:13 PM (IST)

திருமணம் செய்வதாகக் கூறி ரூ.50 லட்சம் மோசடி: இளம்பெண் கைது!
புதன் 24, ஜூன் 2026 10:44:57 AM (IST)

தேசிய ஐஸ் ஹாக்கி போட்டியில் வெள்ளிப் பதக்கம்: கன்னியாகுமரி மாணவனுக்கு ஆட்சியர் வாழ்த்து!
செவ்வாய் 23, ஜூன் 2026 8:15:28 PM (IST)

அகஸ்தீஸ்வரத்தில் மின்சார ரயில் இன்ஜின் பராமரிப்பு தொழிற்கூடம் அமைக்க கோரிக்கை!
செவ்வாய் 23, ஜூன் 2026 3:33:50 PM (IST)

மாற்றுத்திறனாளிகளிடம் கனிவுடன் நடக்க வேண்டும் : ஓட்டுநர், நடத்துநர்களுக்கு ஆட்சியர் உத்தரவு!
திங்கள் 22, ஜூன் 2026 8:11:57 PM (IST)

பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம்: தோவாளையில் சிறப்பு பிங்க் கிராம சபை கூட்டம்!
சனி 20, ஜூன் 2026 5:47:51 PM (IST)



ஆமாமே 8, 2026 - 06:28:45 PM | Posted IP 172.7*****