» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களுக்கு அதிகன மழைக்கான சிவப்பு எச்சரிக்கை
திங்கள் 20, மே 2024 10:29:10 AM (IST)
நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களுக்கு மே 20, 21 ஆகிய நாட்களில் அதிகன மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி: தென்தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், திங்கள் முதல் வியாழக்கிழமை வரை (மே 20-23) தமிழகத்தில் தென்மாவட்டங்கள், மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடிமின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
இதில் குறிப்பாக மே 20-இல் விருதுநகா், திருப்பூா், கோவை, நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களிலும், மே 21-இல் விருதுநகா், திண்டுக்கல், திருப்பூா், கோவை, நீலகிரி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் மே 22-இல் தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகனமழையும், நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
அதேபோல், மே 23-இல் தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதனால் இம்மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மேலும், மே 20,21 ஆகிய தேதிகளில் தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகனமழை பெய்யவுள்ளதால் இந்த மாவட்டகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புகா் புகுதிகளில் மே 20,21-ஆகிய தேதிகளில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை:
மே 20 முதல் மே 23-ஆம் தேதி வரை குமரிக்கடல் , மன்னாா் வளைகுடா, கேரள கடலோரப்பகுதிகள், லட்சத்தீவு-மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 65 கிலோ மீட்டா் வேகத்திலும், தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிலோ மீட்டா் வேகத்திலும் வீசக்கூடும். இதனால் இப்பகுதிகளுக்கு மீனவா்கள் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வியாழன் 3, ஜூலை 2025 10:16:50 AM (IST)

கால்நடைகளுக்கு கால்நோய், வாய்நோய் தடுப்பூசி பணி : ஆட்சியர் துவக்கி வைத்தார்!
புதன் 2, ஜூலை 2025 3:41:45 PM (IST)

குமரி மாவட்டத்தில் 3 அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் ரத்து : தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
செவ்வாய் 1, ஜூலை 2025 10:49:52 AM (IST)

இஸ்ரோ இன்ஜினியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை: குடும்ப பிரச்சினையால் விபரீத முடிவு!
செவ்வாய் 1, ஜூலை 2025 8:34:20 AM (IST)

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை கால நீடிப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 5:48:59 PM (IST)

தனியார் மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு!
திங்கள் 30, ஜூன் 2025 4:04:27 PM (IST)
