» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
துபாயில் வேலை என ஆசை காட்டி ரூ.1.5 கோடி மோசடி செய்தவர் 24 மணி நேரத்தில் கைது!
புதன் 18, பிப்ரவரி 2026 4:55:56 PM (IST)
துபாயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 130-க்கும் மேற்பட்டோரிடம் ரூ.1.5 கோடி மோசடி செய்த நபரை, கன்னியாகுமரி மாவட்டக் குற்றப்பிரிவு போலீசார் 24 மணி நேரத்திற்குள் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் மாதவரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் (31). இவர் மகாதானபுரத்தில் 'சனேட் மேன் பவர் கன்சல்டன்சி' என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். துபாயில் தனக்குச் சொந்தமாக நிறுவனங்கள் இருப்பதாகவும், அங்கு நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாகவும் கூறி 130-க்கும் மேற்பட்ட நபர்களிடம் சுமார் ஒரு கோடியே ஐம்பது லட்சம் ரூபாய் வரை வசூலித்து மோசடி செய்துள்ளார்.
பணம் கொடுத்து ஏமாந்த பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.ஸ்டாலின் உத்தரவின்படி, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தனிப்படை அமைத்துத் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
தலைமறைவாக இருந்த சந்தோஷை செல்போன் சிக்னல் உதவியுடன் பின்தொடர்ந்த போலீசார், அவரை மதுரையில் வைத்து 24 மணி நேரத்திற்குள் சுற்றி வளைத்துக் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்.
எஸ்.பி. கடும் எச்சரிக்கை:
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெயரில் இது போன்ற மோசடிகளில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் பாயும் என எஸ்.பி. ஆர்.ஸ்டாலின், எச்சரித்துள்ளார். பொதுமக்கள் அங்கீகாரம் பெறாத நிறுவனங்களை நம்பி பணத்தைக் கொடுத்து ஏமாற வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார். இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது இது போன்ற புகார்கள் உள்ளவர்கள் 9498196976 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மருத்துவ மேல்படிப்புக்கு சீட் வாங்கித் தருவதாக ரூ.18 லட்சம் மோசடி: தம்பதி உட்பட 3 பேர் மீது வழக்கு!
புதன் 18, பிப்ரவரி 2026 8:41:13 AM (IST)

நாகர்கோவில் தலைமை நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் : போலீசார் தீவிர சோதனை!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 12:25:12 PM (IST)

குமரி மாவட்டக் கல்லூரிகளில் ரூ.11 கோடியில் புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 10:43:44 AM (IST)

டிஆர்பி தேர்வில் வெற்றிபெற்ற 35 ஆசிரியர்களுக்கு பணிநியமன ஆணைகள்: அமைச்சர் வழங்கல்!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 5:27:08 PM (IST)

சிவாலய ஓட்டம்: கனிமவள லாரிகளுக்கு 2 நாட்கள் தடை - எஸ்பி ஸ்டாலின் உத்தரவு!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 4:38:17 PM (IST)

கேரளாவில் முழு அடைப்பு: தமிழகப் பேருந்துகள் எல்லையில் நிறுத்தம் - பொதுமக்கள் அவதி!
வியாழன் 12, பிப்ரவரி 2026 3:12:37 PM (IST)

