» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

இந்திய எல்லைக்குள் நுழைந்த இலங்கை மீனவர்கள் 7பேர் கைது: படகு பறிமுதல்!

சனி 18, மே 2024 4:35:07 PM (IST)

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 7 பேரை, தூத்துக்குடி கடலோர காவல் படையினர் கைது செய்தனர்.

இந்திய கடலோர காவல் படைக்குச் சொந்தமான 'வைபவ்' ரோந்து கப்பல், துாத்துக்குடியிலிருந்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது இலங்கை நாட்டில் பதிவு எண் கொண்ட மீன்பிடி படகு ஒன்று 7 மீனவர்களுடன் இந்திய கடல் எல்லைக்குள் கன்னியாகுமரி கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்துள்ளது தெரியவந்தது. 

இதையடுத்து கடலோர காவல் படை வீரர்கள் அந்த விசைப்படகை சுற்றி வளைத்தனர். அதில் இருந்த 7 மீனவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். படகு மற்றும் 7மீனவர்களையும் நாளை(மே 19) காலை 9 மணிக்கு தருவைக்குளம் மரைன் காவல் நிலையத்தில் ஒப்படைக்க உள்ளனர். 


மக்கள் கருத்து

Gnana Muthuமே 19, 2024 - 10:55:00 PM | Posted IP 162.1*****

இது, இலங்கை மீனவர் படகு இல்லையேடா...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory