» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி தொகுதியில் அமமுக கட்சியினை பாஜக கூட்டணி புறக்கணிப்பதாக குற்றச்சாட்டு!!

புதன் 3, ஏப்ரல் 2024 3:12:50 PM (IST)

கன்னியாகுமரி  பாராளுமன்ற தொகுதியில் அமமுக கட்சியினை பாஜக தொடர்ந்து புறக்கணித்து வருதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

கன்னியாகுமரி  பாராளுமன்ற தேர்தலில் பாஜக வின் கூட்டணி கட்சியான அமமுக கட்சியினரை பாஜகவினர் அனைத்து செயல்பாடுகளிலும் வேண்டா வெறுப்பாக ஏற்றுக் கொண்டது போன்ற என்ணத்தில் பாஜகவினர் செயல்படுவதாகவும் பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பு  பிரச்சாரங்களில் கூட அமமுக கட்சியின் கொடியினையும் உறுப்பிணர்களையும் பாஜகவினர் தொடர்ந்து புறத்தணித்து பாராமுகமாக செயல்படுவதாக குமரி மாவட்ட  அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. 

அது போன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்டத்தில் பாஜக வேட்பாளரான நயினார் நாகேந்திரனண ஆதரித்து அமமுக கட்சியின் கழக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் தேர்தல் பிரச்சாரத்தை மேற்க்கொண்ட போது கூட குமரி மாவட்ட வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிக்க டிடிவி தினகரனுக்கு அழைப்பு விடுக்கவில்லை எனவும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory